கோவையில் முறையான அனுமதியின்றி தேக்கு மரங்கள் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட லாரி பறிமுதல்!

கோவை: கோவையில் முறையான அனுமதியின்றி தேக்கு மரங்கள் கடத்திய லாரி பறிமுதல் செய்யப்பட்டது.


கோவை: கோவையில் முறையான அனுமதியின்றி தேக்கு மரங்கள் கடத்திய லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

கோவை புதூர் அருகே உள்ள பட்டா நிலத்தில் இருந்த தேக்கு மரங்கள் அனுமதியின்றி வெட்டி லாரியில் ஏற்றி கடத்தப்படுவதாக ஓசை அமைப்பினருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து, சம்பவ இடத்திற்குச் சென்ற அவர்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

இதையடுத்து, மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் உத்தரவின் பேரில் மதுக்கரை ரேஞ்சர் சீனிவாசன் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு ஒரு லாரியில் தேக்கு மரங்களை ஏற்றிக் கொண்டு வாகனம் அங்கிருந்து புறப்பட்டு திருச்சி ரோட்டில் உள்ள மில் ஒன்றுக்கு சென்று கொண்டிருந்தபோது வாகனத்தை பின்தொடர்ந்து சென்ற ஓசை அமைப்பினர் சிங்காநல்லூர் அருகே வாகனத்தை சிறை பிடித்தனர்.

இதனைத்தொடர்ந்து, அங்கு வந்த வனத்துறை அதிகாரிகள் தேக்கு மரங்கள் ஏற்றப்பட்டிருந்த லாரியை பறிமுதல் செய்து மதுக்கரை வனச்சரக அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். வனத்துறை அனுமதியின்றி 12க்கும் மேற்பட்ட மரங்கள் டாக்டர் ஒருவருக்கு சொந்தமான நிலத்தில் இருந்து வெட்டி கிடைத்ததாக தெரிகிறது.

இந்த சம்பவம் குறித்து வனத்துறையினர் சோதனை நடத்தி லாரியை பறிமுதல் செய்துள்ளனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...