கோவையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் துவக்கி வைத்தார்!

கோவை: கோவை சின்னியம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாமை மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் துவக்கி வைத்தார்.


கோவை: கோவை சின்னியம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாமை மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் துவக்கி வைத்தார்.

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு சார்பாக தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, இன்று கோவையில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.



கோவை சின்னியம்பாளையம் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளியில் இம்முகாம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர். இம்முகாமினை மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் துவக்கி வைத்தார்.



இந்த நிகழ்வின் போது, உணவு மற்றும் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ். சமீரன், மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், அரசு மருத்துவக்கல்லூரி டீன் நிர்மலா, துணை இயக்குனர் (சுகாதாரம்) செந்தில், முன்னாள் எம்.எல்.ஏ நா. கார்த்திக், திமுக கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் மருதமலை சேனாதிபதி, திமுக மகளிர் தொண்டரணி மீனா ஜெயக்குமார் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...