திருப்பூர்: பல்லடம் அருகே மரத்தில் தொங்கியபடி கைப்பற்றப்பட்ட ஆண் சடலம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த மானாசிபாளையம் அருகே காட்டுப்பகுதியில் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் சடலத்தை பார்த்த பொதுமக்கள் காமநாயக்கன்பாளையம் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
பின்னர், தகவலறிந்து சம்பவ இடம் வந்த காவல்துறையினர் தூக்கில் தொங்கும் நபர் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், அவரது சட்டைப் பாக்கெட்டில் இருந்த செல்போனை வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவரது சட்டைப்பையில் இருந்த ஒரு நோட்டில் நான் ஒரு அனாதை என எழுதி இருந்தது. தூக்கில் தொங்கிய நபருக்கு 55 வயது இருக்கலாம். இவர் யார்? எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.