கோவை: வால்பாறையில் அரசுக்கு சொந்தமான 10 ஏக்கர் நிலத்தை மீட்டு வருவாய்த்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர்.

கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ளது சோலையார் எஸ்டேட். ஜெய் ஸ்ரீ நிறுவனத்திற்கு சொந்தமான சோலையார் எஸ்டேட் நிறுவனம் சுமார் 50 ஆண்டு காலமாக வருவாய்துறைக்கு சொந்தமான 10 ஏக்கர் பரப்பளவு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து அந்த எஸ்டேட் தேயிலையை பயிரிட்டுள்ளது. மேலும், அந்த நிலத்திற்கான எந்தவித வரியும் இதுவரை அரசுக்கு செலுத்தாமல் இருந்து வந்ததை சம்பந்தப்பட்ட துறைசார்ந்த அதிகாரிகள் கள ஆய்வின் மூலம் தெரிந்து கொண்டனர்.
இதைத்தொடர்ந்து, கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவிற்கிணங்க சோலையார் எஸ்டேட்டில் ஆக்கிரமிப்பு செய்துள்ள பகுதிக்கு வால்பாறை வட்டாட்சியர் ராஜா தலைமையில் கிராம நிர்வாக அலுவலர் விஜய் அமிர்தராஜ் மற்றும் வருவாய்துறை அலுவலர்கள் கொண்ட வரு வருவாய்துறைக்கு சொந்தமான அந்த 10 ஏக்கர் நிலத்தை அதிரடியாக கையகப்படுத்தி வருவாய்த்துறையினருக்கு சொந்தமான இடம் என்பதற்கான அறிவிப்பு பலகையை அங்கு வைத்து துரித நடவடிக்கை மேற்கொண்டனர்.