கோவை: கோவை கிணத்துக்கடவு பகுதியில் நேற்று கொரோனா தொற்று பாதிப்பு இல்லை என்று சுகாதாரத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலையின் பாதிப்பு கடந்த மார்ச் மாதம் முதல் அதிகரித்து வந்தது.
இதையடுத்து, சுகாதாரத்துறை சார்பில் கொரோனா தொற்று கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டதன் விளைவாக, படிப்படியாக கிணத்துக்கடவு பகுதியில் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வந்தது.
இந்த நிலையில், கடந்த சில நாட்களாக 10க்கும் கீழ் மட்டும் தொற்று உறுதி செய்யப்பட்டு வந்த நிலையில், நேற்று (ஜூலை 19ம்) கிணத்துக்கடவு தாலுகா பகுதியில் கொரோனா பாதிப்பு யாருக்கும் இல்லை என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளனர்.
மேலும், தற்போது வரை கிணத்துக்கடவு பகுதியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 2049 பேரில் 2022 பேர் குணமடைந்துள்ளனர். மீதமுள்ள 18 பேர் மட்டும் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.