கோவை: கோவை பிஷப் அப்பாசாமி கல்லூரியில் நடைபெற்ற கோவை திருமண்டல சிஎஸ்ஐ செயற்குழு கூட்டத்தில் மோசடி புகார் குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது திடீரென மோதலில் ஈடுபட்டு சிலரது மண்டை உடைந்தது.
கோவை: கோவை பிஷப் அப்பாசாமி கல்லூரியில் நடைபெற்ற கோவை திருமண்டல சிஎஸ்ஐ செயற்குழு கூட்டத்தில் மோசடி புகார் குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது திடீரென மோதலில் ஈடுபட்டு சிலரது மண்டை உடைந்தது. இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
கோவை உட்பட எட்டு மாவட்டங்கள் அடங்கிய சிஎஸ்ஐ திருமண்டல செயற்குழு கூட்டம் அந்த சாலையில் உள்ள பிஷப் அப்பாசாமி கல்லூரியில் உள்ள சர்ச்சில் நடைபெற்றது. அதில் பங்கேற்ற செயற்குழு உறுப்பினரும், வழக்கறிஞருமான நேச மர்லின் என்பவர் கடந்த காலங்களில் நடைபெற்ற மோசடிகள் குறித்து ஆதாரத்துடன் எடுத்து விளக்கி வந்ததாகத் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த சார்லஸ் சாம்ராட், வில்சன் குமார், பாக்கியராஜ் உட்பட எதிர்தரப்பினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறிய அளவில் சார்லஸ் சாம்ராஜ் என்பவர் அருகில் இருந்த இரும்பு கம்பியை எடுத்து நேச மர்லின் தலையில் தாக்கினார்.

இதில் பலத்த காயமடைந்த நேச மர்லின் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் தொடர்பாக சம்பவ இடத்துக்கு விரைந்த பந்தய சாலை போலீஸார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இதுதொடர்பாக படுகாயமடைந்த, நேச மர்லின் கூறும் போது, ‘‘ஏற்கனவே ஊழல் முறைகேடுகள் தொடர்பாக வழக்கு தொடுக்கப்பட்டு கடந்த 2019 அக்டோபர் 4 அன்று கோவை நீதிமன்றம் எஸ்ஐ திருமண்டல தேர்தல் மற்றும் கூட்டம் நடத்த தடை இந்நிலையில் தடையை மீறி இன்று கூட்டம் ஏற்பாடு செய்ததோடு ஊழல் குற்றச்சாட்டுகளை ஒவ்வொன்றாக பதிவு செய்து வரும்போது தகராறில் ஈடுபட்டதுடன், பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரையும் மீறி சார்லஸ் சாம்ராட் என்பவர் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பேராயர் பிஷப் தாமோத்தி முன்னிலையில் தன் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியதாகவும் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' எனவும் தெரிவித்துள்ளார்.