கோவையில் ஜிகா வைரஸ் தாக்குதல் குறித்து கொசுக்களின் லார்வாக்களை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது

கோவை: கொரோனா பெருந்தொற்று இரண்டாவது அலை நன்கு ஓய்ந்த நிலையில், கோவையில் ஜிகா வைரஸ் தாக்குதல் குறித்து கொசுக்களின் லார்வாக்களை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.


கோவை: கொரோனா பெருந்தொற்று இரண்டாவது அலை நன்கு ஓய்ந்த நிலையில், கோவையில் ஜிகா வைரஸ் தாக்குதல் குறித்து கொசுக்களின் லார்வாக்களை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

கேரளாவில் ஜிகா வைரஸ் தாக்கம் அதிகமாக இருப்பதால் கோவை மாநகராட்சி நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை மாவட்ட நிர்வாகம் இணைந்து முழுமையான தடுப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது. அதன் ஒரு முயற்சியாக வைரஸை ஏற்படுத்தக்கூடிய கொசுக்களுடைய லார்வாக்கள் என சொல்லப்படும் புழுக்கள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. கேரளாவில் ஜிகா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதால் கோவையில் 10 இடங்களில் கொசுக்களின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

கேரள மாநிலத்தில் பல இடங்களில ஜிகா வைரஸ் பாதிப்பினால் 25க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனா். இதையடுத்து, தமிழகத்தில் ஜிகா வைரஸ் பாதிப்பு ஏற்படாமல் இருக்க தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக தமிழக - கேரள எல்லைப் பகுதிகளான வாளையாறு, ஆனைகட்டி, வேலந்தாவளம், மீனாட்சிபுரம் உள்ளிட்ட 13 சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த ஜிகா வைரஸ் டெங்கு, சிக்கன்குனியா ஆகியவற்றை பரப்பும் ஏடிஎஸ் வகை கொசுவினால் ஏற்படுகிறது. இதையடுத்து, கோவை மாவட்டத்தில் கேரள எல்லைப் பகுதிகளில் உள்ள பொள்ளாச்சி, ஆனைமலை, வாளையாறு, மீனாட்சிபுரம், கோபாலபுரம் உள்ளிட்ட 10 இடங்களில் உள்ள நீா்நிலைகளில் கொசுக்களின் லார்வாக்கள் சேகரிக்கப் பட்டுள்ளன. இவை ஆய்வுக்காக சென்னையில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘ஜிகா வைரஸ் பாதிப்பு தொடா்பாக ஆய்வு நடத்த நீா்நிலை பகுதிகள், குடியிருப்புப் பகுதிகளில் தேங்கியிருக்கும் கொசுக்களின் லார்வாக்கள் மாதிரி சேகரிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 10 இடங்களில் தலா 25 லார்வாக்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.

கொசுவாகப் பிடித்து ஆய்வு செய்வதில் சிக்கல் இருப்பதால், லார்வாக்கள் வளா்ந்த பின் ஆய்வு செய்ய பயன்படுத்தப்படுகிறது. மேலும், ஏற்கெனவே அனுப்பப்பட்ட ஆய்வு முடிவுகளின்படி கோவை மாவட்டத்தில் ஜிகா வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தும் கொசுக்கள் கண்டறியப்படவில்லை.

தற்போது, டெங்கு பாதிப்பு குறித்து கண்டறிய லார்வாக்கள் மாதிரிகள் சேகரித்து சென்னையில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன. ஆய்வு முடிவுகள் ஒரு வாரத்துக்குள் கிடைக்கப்பெறும், இதைப் பொறுத்து அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் திட்டமிடப்படும்'' என்றனா்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...