கோவை: கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுதும் கஞ்சா, சூதாட்டம், லாட்டரி விற்பனை செய்த ஐந்து பேர் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோவை: கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுதும் கஞ்சா, சூதாட்டம், லாட்டரி விற்பனை செய்த ஐந்து பேர் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோவையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக செல்வநாகரத்தினம் பதவி ஏற்றதில் இருந்து தொடர்ந்து மாவட்டம் முழுவதும் சமூக விரோத செயல்கள் மற்றும் போதைப் பொருட்கள் சம்பந்தமாக விற்பனையில் ஈடுபடக்கூடிய அவர்களை தனிப்படை அமைத்து உத்தரவிட்டு கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகிறார். அதனடிப்படையில் இன்று லாட்டரி, சூதாட்டம், கஞ்சா விற்பனை செய்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்த பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
‘‘கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் இ.கா.ப., உத்தரவின் பேரில் கோவை மாவட்டம் முழுவதும் காவல் துறையினர் நடத்திய அதிரடி சோதனையில்...
கஞ்சா வழக்கு
மொத்த வழக்குகள்: 01
கைது செய்யப்பட்ட எதிரிகள்: 01
பறிமுதல் செய்யப்பட்ட சொத்தின் விவரம்: 1200 கிராம் கஞ்சா
சூதாட்ட வழக்குகள்
மொத்த வழக்குகள்: 01
கைது செய்யப்பட்ட எதிரிகள்: 03
பறிமுதல் செய்யப்பட்ட சொத்தின் விபரம் : ரூ.1500/-
புகையிலை வழக்குகள்
மொத்த வழக்குகள்: 01
கைது செய்யப்பட்ட எதிரிகள்: 01
பறிமுதல் செய்யப்பட்ட சொத்தின் விவரம்: 18 புகையிலை பாக்கெட்.
மேற்படி வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும், சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் பற்றிய தகவலை 7708100100 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவர்களின் விவரம் ரகசியங்கள் காக்கப்படும்.