கோவையில் தூய்மைப் பணியில் ஈடுபடாத பணியாளர்களுக்கு அலுவலகப் பணி... வலுக்கும் எதிர்ப்பு..!

கோவை: கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியில் ஈடுபடாத பணியாளர்களுக்கு அலுவலகப் பணி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்பு வலுத்து வருகிறது.


கோவை: கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியில் ஈடுபடாத பணியாளர்களுக்கு அலுவலகப் பணி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்பு வலுத்து வருகிறது.

கோவை மாநகராட்சியில் கடந்த ஆண்டு 325 தூய்மைப் பணியாளர்கள் புதியதாக நியமனம் செய்யப்பட்டனர். அனைத்து சாதியினருக்கும் பொதுவாக தூய்மைப் பணியினை வழங்கவேண்டும் என்று அரசு ஆணையின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட பணியாளர்கள் பெரும்பாலும் உயர் படிப்பு படித்தவர்கள் ஆகும். இவர்கள் அதிகப்படியான தகுதியை மேற்கொண்டு தூய்மைப் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதனால் அப்போது பெரும் சர்ச்சை ஏற்பட்டது. பின்னர் இதில் சிலர் இதுநாள்வரை தூய்மைப் பணி செய்ய மறுத்து வருகின்றனர் எனக் கூறப்படுகிறது.

அரசு பணி விதிகளின்படி தேர்ந்தெடுக்கப்பட்ட பணியாளர் தனக்கு உரிய பணியினை செய்யத் தவறினால் அவரை பணியை விட்டு நீக்குவதற்கு அரசு விதிகள் உள்ளது. ஆயினும் இதுவரை எந்த ஒரு அதிகாரியும் இவர்கள் மேல் நடவடிக்கை எடுக்காமல் மேலும், அவர்களை அலுவலகத்திற்குள் பணி செய்ய ஊக்குவிக்கிறார்கள் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனிடையே கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் 13 தூய்மைப் பணியாளர்களுக்கு அலுவலகத்திற்குள் பணி செய்ய ஆணை பிறபிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சமூக நீதிக்கட்சி தலைவர் பன்னீர் செல்வம் கூறியதாவது: ‘‘கருணை அடிப்படையிலும், வேலைவாய்ப்பு அடிப்படையிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட தூய்மைப் பணியாளர்கள் தாழ்த்தப்பட்ட வகுப்பை சார்ந்தவர்கள் என்றால், கட்டாயப்படுத்தி வார்டுகளில் தூய்மைப் பணி செய்யப் பணிக்கப்படுவது வாடிக்கையாக உள்ளது. அரசு விதிகள் அனைவருக்கும் பொதுவானவை என்ற போதிலும் இன்றளவும் சாதியின் வெறியால் ஒருசிலருக்கு பாகுபாடு பார்த்து தூய்மைப் பணியை செய்ய கட்டாயப்படுத்துவது தொடர்கிறது. தூய்மைப் பணி செய்வது கேவலமாக நினைத்து இன்றுவரை பணி செய்ய மறுப்பது சாதி வேறுபாடுக்கு ஊக்குவிப்பதற்கு சரிநிகர் ஆகும்.

இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு கடிதம் வாயிலாகவும், நேரிலும் எடுத்துக்கூறியும், புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படாமல் இருக்கிறது. எனவே, தொடர்ந்து தூய்மைப் பணி செய்ய மறுக்கின்ற யாராக இருந்தாலும் கட்டாயமாக தூய்மைப் பணி செய்ய வார்டு பணிக்கு அழைக்கின்ற நடவடிக்கையில் சமூக நீதிக்கட்சி முன்னெடுத்துள்ளது. இதுதொடர்பாக இன்று காலை 11 மணியளவில் மாநகராட்சி மத்திய மண்டலம் அலுவலகத்தில் உதவி கமிஷனரை நேரில் சந்தித்து வெத்தலை பாக்கு தாம்பூல தட்டுடன் அழைப்பு கொடுக்கும் நிகழ்வு நடைபெறும்.'' என்று அவர் கூறினார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...