திருப்பூர்: லாரி ஓட்டுநரான தன் கணவர் இறந்தவிட்ட நிலையில், அவருக்கு சேரவேண்டிய சம்பளத் தொகையும் இழப்பீட்டுத் தொகையும் விரைந்து பெற்றுத் தருமாறு, இறந்த லாரி ஓட்டுநரின் மனைவி திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியைச் சேர்ந்த லட்சுமி என்பவரது கணவர் குப்புசாமி கடந்த ஜூன் மாதம் 20ஆம் தேதி தான் பணிபுரியும் நிறுவனத்திற்காக லாரியை ஓட்டிச் சென்றுள்ளார். ஜெய்ப்பூர் சென்ற அவர் இறந்துவிட்டதாகக் கூறி, அவரது உடலை மட்டும் மனைவியிடம் ஒப்படைத்து இருக்கின்றனர். அதன் பிறகு அவர்களிடம் இருந்து எந்த உதவியும் கிடைக்காத நிலையில், கணவர் வேலை பார்த்த நிலுவை சம்பளத் தொகையும், இழப்பீடு தொகையும் வழங்குவதாக தெரிவித்திருந்த நிலையில், அவற்றையும் வழங்காததால் ஏழ்மை நிலையில் தனது கணவரின் தாய் மற்றும் குழந்தைகளை வைத்து வாழ முடியாத சூழலில் இருப்பதால், உடனடியாக நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுத்து தங்களுக்கு வரவேண்டிய தொகையை மீட்டுத் தர வேண்டும் என வலியுறுத்தி லட்சுமி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்.