கோவையில் பாதுகாப்பு கருதி திடீரென உருவான சிமெண்டு தடுப்பு..!

கோவை: கோவை காந்திபுரம் திருவள்ளுவர் பேருந்து நிலையம் அருகே பாதுகாப்பு கருதி திடீரென உருவான சிமெண்டு தடுப்பால், பொதுமக்கள் இனி குறுக்கே பாய்ந்து தடுப்பை மீறி செல்ல முடியாது.


கோவை: கோவை காந்திபுரம் திருவள்ளுவர் பேருந்து நிலையம் அருகே பாதுகாப்பு கருதி திடீரென உருவான சிமெண்டு தடுப்பால், பொதுமக்கள் இனி குறுக்கே பாய்ந்து தடுப்பை மீறி செல்ல முடியாது.

கோவை காந்திபுரம் சிக்னல் அருகே திருவள்ளுவர் பேருந்து நிலையத்திற்கு செல்லும் வழியில் மக்கள் இதுவரை சாலை விதிகளை மதிக்காமல் டவுன் பேருந்து நிலையத்தில் பஸ்சில் இருந்து இறங்கிய உடன் உடனடியாக வெளியூருக்கு செல்ல பேருந்துகளை பிடிப்பதற்காக குறுக்கு வழியில் தடுப்பு இரும்பு தகடுகளை விலக்கிவிட்டு ஏறி குதித்து திருவள்ளுவர் பேருந்தை அடைந்து வந்தனர். எதையோ சாதித்தது போல பஸ்ஸில் ஏறி பயணித்து வந்தனர். அதனால், அந்த ரோட்டில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வந்தன.

இதுகுறித்து, பல்வேறு கோரிக்கைகள் விடப்பட்டன. இந்த நிலையில், இன்று திடீரென காந்திபுரம் சிக்னலில் இருந்து டவுன் பேருந்து நிலையத்தின் பின்புறம் வரை சிமெண்ட் தளம் உருவாக்கப்பட்டு அதன் மீது கருப்பு வெள்ளை பெயின்ட்டும் அடிக்கப்பட்டது. ஆதலால், அந்தப் பகுதியில் மக்கள் ஏறி குதித்து வெளியூருக்கு செல்ல முடியாது. இனி முறைப்படி சாலை விதியை மதித்து செல்ல வேண்டும். ஆதலால், விபத்துகள் குறையும் என சமூக ஆர்வலர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...