கோவை காந்திபுரம் டவுன் பேருந்து நிலையத்தில் நோ பார்க்கிங்கில் நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்து இடையூறு..!

கோவை: கோவை காந்திபுரம் டவுன் பேருந்து நிலையத்தில் நோ பார்க்கிங்கில் நிறுத்தப்படும் வாகனங்களால் பெரிதும் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது. இதனால், விபத்து நேருமோ என்று மக்கள் அச்சம் கொள்கின்றனர்.


கோவை: கோவை காந்திபுரம் டவுன் பேருந்து நிலையத்தில் நோ பார்க்கிங்கில் நிறுத்தப்படும் வாகனங்களால் பெரிதும் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது. இதனால், விபத்து நேருமோ என்று மக்கள் அச்சம் கொள்கின்றனர்.

கோவை காந்திபுரம் பகுதியில் மூன்று பேருந்து நிலையங்கள் உள்ளன. அவை சென்ட்ரல் பேருந்து நிலையம், திருவள்ளுவர் பேருந்து நிலையம், டவுன் பேருந்து நிலையம் என்பனவாகும். இதில் டவுன் பேருந்து நிலையம் எப்போதும் பரபரப்பாக காணப்படும். அங்கிருந்து கோவையில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு செல்வதற்கு காலை, மாலை, மதியம், என மக்கள் கூட்டம் அலை மோதிக் கொண்டிருக்கும். இதுபோன்ற கூட்டத்தை சமாளிப்பதற்காக போலீஸார் டவுன் பேருந்து நிலைய வாசலின் ஓரத்தில் இருசக்கர வாகனங்கள் பூக்கடைகள் போன்றவை வைக்கக்கூடாது என உத்தரவு பிறப்பித்து, நோ பார்க்கிங் போர்டும் வைத்துள்ளனர்.

ஆனால், இதை யாரும் மதிக்காமல் வழக்கம்போல வரிசையாகக் கடைகளும், நோ பார்க்கிங் போர்டுக்கு இடையில் உள்ள பகுதியில் தொடர்ந்து இரு சக்கர வாகனங்களும் ஆட்டோக்களும் நிறுத்தப்பட்டுள்ளது. ஆதலால், பேருந்து வெளியே திரும்பும்போது விபத்துக்குள்ளாகும் நிலை ஏற்படுகிறது. போலீஸாரால் வைக்கப்பட்டுள்ள நோ பார்க்கிங் போர்டுக்கு இடையிலேயே வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. நோ பார்க்கிங் போர்டையும் மீறி வாகனங்கள் நிறுத்தி இடையூறி ஏற்படுத்துவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...