கோவை: கோவை மாநகராட்சியால் மாற்றுத் திறனாளிகள் மற்றும் பொதுமக்களுக்கு வைக்கப்பட்ட ஹைடெக் கழிப்பறை தண்ணீர் இல்லாமல் அசுத்தமாகக் கிடக்கிறது. இதனை பயன்பாட்டுக்குரிய வகையில் சுத்தப்படுத்தித்தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தின் வெளிப்பகுதியில் மாநகராட்சி சார்பாக மாற்றுத் திறனாளிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இலவச ஹைடெக் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட நவீன கழிப்பிடம் உள்ளது. ஆனால், இதை மக்கள் பயன்படுத்த முடியாத அளவிற்கு படு மோசமான நிலையில் பூட்டி வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி துப்புரவு பணியாளரிடம் கேட்டபோது, ‘‘தொட்டியில் ஏற்றுவதற்கு தண்ணீர் போதிய அளவு கிடைப்பது கிடையாது. அதனால் நாங்களும் அதை துப்புரவுப்படுத்துவதும் கிடையாது. இதைப் பயன்படுத்த வேண்டும் என்றால், நல்ல தண்ணீரை மட்டுமே மேலே ஏற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. ஆனால், சிறப்பான தொழில் நுட்பத்தில் உருவாக்கப்பட்டது. இப்படி பயன்படுத்தப்படாமல் பாழடைந்து கிடப்பது எங்களுக்கும் வருத்தத்தை அளிக்கிறது'' என தெரிவித்தனர்.
உடனே மாநகராட்சி தலையிட்டு, பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்துவதற்காக தினம்தோறும் தொட்டியில் தண்ணீரை நிரப்பி சுத்தம் செய்து மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்த நடைமுறைப்படுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.