கோவை: கோவை மாவட்டம் சூலூர் அருகே நெடுஞ்சாலைத்துறை உதவி இன்ஜினீயர் வீட்டில் ரூபாய் 13 லட்சம் பணம் 6 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. இந்த கொள்ளைச் சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை சூலூர் அருகே உள்ள ஜி.கே.எஸ். நகரைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மனைவி தனலட்சுமி வயது 42, இவர் திருப்பூர் மாவட்டம் நெடுஞ்சாலைத் துறையில் உதவிப் பொறியாளராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 17ஆம் தேதி இவர் தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் ஈரோட்டில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றார். அப்போது இவரது வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த ரூபாய் 13 லட்சம் ரொக்கப் பணம், 6 பவுன் நகை ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர்.
நேற்று இரவு வீட்டிற்கு திரும்பிய தனலட்சுமி கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, அறையில் இருந்த பீரோவில் பணம் மற்றும் நகை கொள்ளை போயிருந்தது. இதுகுறித்து தனலட்சுமி சூலூர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார்.
உடனடியாக போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும், சம்பவ இடத்தில் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டனர். கை ரேகை பதிவு எடுக்கப்பட்டது. தொடர்ந்து குற்றவாளியை போலீஸார் தேடி வருகின்றனர்.