திருப்பூர்: அவிநாசி அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்ற லட்சுமியின் வங்கிக் கணக்கில் 50 லட்ச ரூபாய் வந்திருப்பதால் சந்தேகத்தின் அடிப்படையில் ஆசிரியையின் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் லட்சுமி. இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக தனது ஓய்வூதிய பணத்தை ஸ்டேட் பேங்க் வங்கி கணக்கிலிருந்து எடுத்து வரக்கூடிய சூழ்நிலையில், கடந்த மே மாதம் தனது ஓய்வூதியப் பணத்தை எடுக்கச் சென்றபோது வங்கியின் கணக்கு சைபர் கிரைம் காவல்துறை பரிந்துரையின்படி முடக்கப்பட்டுள்ளதாக குறுஞ்செய்தி வந்துள்ளது.
பணம் எடுக்க முடியாத காரணத்தால் வங்கி மேலாளரை நேரில் சென்று பார்த்தபோது, ‘‘தங்கள் கணக்கில் 50 லட்ச ரூபாய் வந்திருப்பதால் சந்தேகத்தின் அடிப்படையில் முடக்கப்பட்டு உள்ள''தாக தெரிவித்துள்ளார். ஆனால், அந்த பணம் எங்கிருந்து வந்தது என வங்கி நிர்வாகத்திற்கு தெரியவில்லை என பதில் அளித்துள்ளனர். வங்கிக் கணக்கு புத்தகத்தில் பதிவு செய்யும் போது 50 லட்ச ரூபாய் காட்டவில்லை எனவும் வங்கி நிர்வாகம் சார்பில் தங்களுக்கு முழுமையான தகவல்கள் தெரிவிக்கவில்லை எனவும் கொரோனா ஊரடங்கு காலத்தில் ஓய்வூதிய தொகையையும் எடுக்க முடியாத சூழ்நிலை நிலவுவதால் உடனடியாக இதன் மீது விசாரணை மேற்கொண்டு வங்கிக் கணக்கை செயல்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என வலியுறுத்தி பாதிக்கப்பட்ட ஓய்வு பெற்ற ஆசிரியர் லட்சுமி மற்றும் அவரது கணவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோரிடம் இன்று நேரில் மனு அளித்தனர். இதுகுறித்து ஏற்கெனவே முதலமைச்சரின் தனிப் பிரிவு மனு அளித்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.