கோவை: ஒன்னேகால் கோடி மதிப்புள்ள ஹெராயின் போதைப் பொருள் கடத்திய நைஜீரிய வாலிபர் கைது செய்யப்பட்டார். மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை. டெல்லியில் இருந்து கோவை வந்த ரயிலில் சிக்கினான்.

கோவை வழியாக நைஜீரிய நாட்டைச் சேர்ந்த வாலிபர் ஹெராயின் போதைப் பொருள் கடத்துவதாக டெல்லியில் உள்ள மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக அவர்கள் இது குறித்து மதுரையில் செயல்பட்டு வரும் மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து அவர்களை உசார்படுத்தினர். தகவல் கிடைத்ததும் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விரைந்து வந்தனர். கோவை ரயில் நிலையத்துக்கு சென்று அங்கு தீவிர சோதனை நடத்தினர். அப்போது அந்த ரயிலில் வந்த வாலிபர் ஒருவரின் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டு அவரை பிடித்து விசாரித்தபோது முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார்.

அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது அதில் 2.3 கிலோ ஹெராயின் போதைப் பொருள் இருந்தது. இதையடுத்து போலீஸார் அவற்றை பறிமுதல் செய்தனர். இதன் மொத்த மதிப்பு ஒன்னேகால் கோடி ஆகும். இதனைத் தொடர்ந்து அதிகாரிகள் வாலிபரை கைது செய்து அவரை, ரயில் நிலையத்தில் உள்ள மத்திய ரயில்வே பாதுகாப்பு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அந்த வாலிபர் நைஜீரிய நாட்டைச் சேர்ந்த எட்வின் கிங்ஸ்லி என்பதும் திருப்பூரில் தங்கியிருந்து பனியன் உள்ளிட்ட ஆடைகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், இவர் டெல்லியில் இருந்து போதைப் பொருட்களை கடத்தி வந்து திருப்பூரில் விற்பனை செய்ததும் தெரியவந்தது. ஏற்கெனவே இது போன்ற போதைப் பொருட்கள் கடத்தி வந்துள்ளாரா? எங்கெல்லாம் விற்பனையில் ஈடுபட்டுள்ளார் என்பது குறித்து மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும், இவரை மதுரையில் உள்ள மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தவும் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். டெல்லியில் இருந்து கோவைக்கு வந்த ரயிலில் போதைப்பொருள் கடத்தி வந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.