மன அழுத்தத்தை குறைக்க ஈஷா சார்பில்‌ இலவச யோகா வகுப்பு வீட்டில்‌ இருந்தபடியே பங்கேற்கலாம்‌..!

கோவை: கொரோனா பெருந்தொற்று பரவி வரும் இக்காலகட்டத்தில், மன அழுத்தத்தை குறைக்க ஈஷா சார்பில்‌ மூன்று நாள்‌ இலவச யோகா வகுப்பு வீட்டில்‌ இருந்தபடியே பங்கேற்க ஆன்லைன் வாயிலாக நடைபெற உள்ளது.



கோவை: கொரோனா பெருந்தொற்று பரவி வரும் இக்காலகட்டத்தில், மன அழுத்தத்தை குறைக்க ஈஷா சார்பில்‌ மூன்று நாள்‌ இலவச யோகா வகுப்பு வீட்டில்‌ இருந்தபடியே பங்கேற்க ஆன்லைன் வாயிலாக நடைபெற உள்ளது.

கொரோனா பெருந்தொற்று பரவி வரும்‌ இந்த சவாலான காலத்தில்‌ ஈஷா சார்பில்‌ ‘உயிர்‌ நோக்கம்‌' என்ற யோகா வகுப்பு ஆன்லைன்‌ வாயிலாக ஜூலை 23-ம்‌ தேதி முதல்‌ ஜூலை 25-ம்‌ தேதி வரை இலவசமாக நடைபெற உள்ளது.

காலை 6.30 முதல்‌ 8.30 மணி வரை, மதியம்‌ 11 மணி முதல்‌ 1 மணி வரை, மாலை 4.30 மணி முதல்‌ 6.30 மணி வரை என மூன்று வேளைகளில்‌ இவ்வகுப்பு தினமும்‌ 2 மணி நேரம்‌ நடக்கும்‌. பங்கேற்பாளர்கள்‌ தங்கள்‌ விருப்பத்திற்கு ஏற்ப இதில்‌ ஏதேனும்‌ ஒரு நேரத்தை கேர்வு செய்து கொள்ளலாம்‌.

12 வயதுக்கு மேற்பட்ட அனைத்து வயதினரும்‌ இவ்வகுப்பில்‌ கலந்து கொள்ளலாம்‌. இதில்‌ கற்றுக்கொடுக்கப்படும்‌ யோகா பயிற்சிகளை தினமும்‌ செய்து வருவதன்‌ மூலம்‌ முதுகுத்தண்டு வலுப்பெறும்‌, மூட்டு வலியில்‌ இருந்து விடுதலை பெறலாம்‌, மன அழுத்தம்‌ குறையும்‌, உடல்‌ ஆரோக்கியம்‌ மேம்படும்‌.

இதில்‌ கலந்து கொள்ள விரும்புபவர்கள்‌ isha.co/Uyirnokkam என்ற இணைகளத்தில்‌ முன்பதிவு செய்து கொள்ளலாம்‌. பதிவு செய்ய உதவி தேவையெனில்‌ 7383673836 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால்‌ செய்யலாம்‌. முன்பதிவு ஜூலை 21-ஆம்‌ தேதி மதியம்‌ 12 மணியுடன்‌ நிறைவு பெறுகிறது.



நிறைவு நிகழ்ச்சியாக ஜூலை 25-ம்‌ தேதி இரவு 7 மணிக்கு தமிழில்‌, சத்குருவுடன்‌ ஆனந்த சங்கமம்‌ நிகழ்ச்சி ஆன்லைனில்‌ நடைபெறும்‌. இதில்‌ அனைத்து வயதினரும்‌ கலந்துகொள்ளலாம்‌.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...