கோவை: மோடி அரசு மேற்கொண்டுள்ள ஒட்டுக்கேட்கும் செயலால் ஊடகம், மனித உரிமை செயல்பாட்டாளர், வழக்கறிஞர், நீதிபதிகள் போன்றோர்களுக்கு இந்தியாவில் பாதுகாப்பற்ற சூழல் உள்ளதாக மே.17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தெரிவித்துள்ளார்.
கோவை: மோடி அரசு மேற்கொண்டுள்ள ஒட்டுக்கேட்கும் செயலால் ஊடகம், மனித உரிமை செயல்பாட்டாளர், வழக்கறிஞர், நீதிபதிகள் போன்றோர்களுக்கு இந்தியாவில் பாதுகாப்பற்ற சூழல் உள்ளதாக மே.17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தெரிவித்துள்ளார்.
கோவையில் செய்தியாளர்களை சந்தித்த மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி அவர்களுக்கு அளித்த பேட்டியில், ‘‘நேற்று இரவு மோடி அரசு 50-க்கும் மேற்பட்டோரின் கைப்பேசிகள் மற்றும் கணினிகளை ஒட்டுக்கேட்டுள்ளதாகவும், இது சட்டவிரோதமான செயல்'' எனவும் கூறினார். மேலும், ‘‘இதேபோல், மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் சமூக செயற்பாட்டாளர் ஒருவரின் கணினியில் பொய்யான தகவலை பதிவு செய்து அவரை மோடி அரசு கைது செய்துள்ளது. மக்களுக்காக போராடுபவர்கள் மீது இந்த அரசு ஏன் சட்டவிரோதமாக செயல்படுகிறது?'' என்றார்.
‘‘இதுபோன்ற நேர்மையற்ற செயல்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இஸ்ரேலிடம் இருந்து வாங்கிய, அரசு மட்டுமே வாங்கக் கூடிய பெகாஸஸ் செயலியை பாதுகாப்பிற்காக பயன்படுத்தாமல், சட்டவிரோதமாக மோடி அரசு பயன்படுத்தியுள்ளது. இதுபோன்ற செயல்கள் தொடர்ச்சியாக அனைவருக்கும் நடக்கும் என்கிற அச்சம் உள்ளது. மேலும், உளவுக்கு உள்ளானவர்களின் முழு பட்டியல் விரைவில் வரும். ஊடக சுதந்திரம் இந்தியாவில் முடக்கப்பட்டு ஊடகங்களை முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் செயலாக உள்ளது. இதன் மூலம் ஜனநாயக விரோத தாக்குதல் திட்டமிட்டு செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை 6 மாதத்தில் ஊடகங்களை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவோம் என வெளிப்படையாகவே கூறியிருப்பது ஒரு வித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பாஜக-வை எதிர்த்து கேள்வி கேட்டால் தேச துரோகிகள் என பழி சேமித்த பெகாசஸ் செயலி மூலம் கண்காணிக்கப்படுவபர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. ஊடகம், மனித உரிமை செயல்பாட்டாளர், வழக்கறிஞர், நிதிபதிகள் போன்றோர்களை அச்சுறுத்தும் செயலாக உள்ளது.
அடுத்து வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெறாது என்பதால் இதுபோன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன'' என்று கூறினார்.