கோவை கிணத்துக்கடவு அருகே பயணிகள் ஆட்டோ - கார் நேருக்கு நேர் மோதி விபத்து- 5 பேர் படுகாயம்!

கோவை: கோவை கிணத்துக்கடவு அருகே பயணிகள் ஆட்டோ- கார் நேருக்கு நேர் மோதி விபத்தில் நான்கு பெண்கள் உட்பட 5 பேர் படுகாயமடைந்தனர்.


கோவை: கோவை கிணத்துக்கடவு அருகே பயணிகள் ஆட்டோ - கார் நேருக்கு நேர் மோதி விபத்தில் நான்கு பெண்கள் உட்பட 5 பேர் படுகாயமடைந்தனர்.

கோவை கிணத்துக்கடவு அருகே உள்ள அரசம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பத்மாவதி(48). இவர் நேற்று மாலை தாயார் மயிலாத்தாள்(65) மற்றும் உறவினர்களான மகேஸ்வரி(36) சுந்தராம்பாள்(60) ஆகியோர் அரசம்பாளையம் பகுதியில் இருந்து பயணிகள் ஆட்டோ மூலம் சொக்கனூர் பகுதியிலுள்ள உறவினர் ரங்கம்மாளை பார்க்கச் சென்று கொண்டிருந்தனர் . ஆட்டோவை மணிகண்டன்(26) என்பவர் ஓட்டிச் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, கிணத்துக்கடவில் இருந்து சொக்கனூர் செல்லும் சாலையில் சிக்கலாம்பாளையம் பகுதியில் சென்று கொண்டிருக்கும் போது, எதிரே அதிவேகமாக வந்த கார் ஒன்று ஆட்டோ மீது மோதியது.

இதில் ஆட்டோவில் இருந்த பத்மாவதி உள்ளிட்ட 5 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. இதையடுத்து, அப்பகுதியில் இருந்தவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து தகவலறிந்து சென்ற காவல்துறையினர் விபத்து குறித்து விசாரணை நடத்தி, படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வரும் பத்மாவதி கொடுத்த புகாரின் பேரில் கார் ஓட்டுனர் ஈரோடு மாவட்டம் தாளவாடி பகுதியைச் சேர்ந்த சிவச்சந்திரன் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...