கோவை ஐ.என்.எஸ் அக்ராணியில் இந்திய சுதந்திரத்தின் பவள விழா மற்றும் ஸ்வர்ணிம் விஜய் ஆண்டு நினைவு கொண்டாட்டம்.

கோவை: கோவை ஐ.என்.எஸ் அக்ராணியில் இந்திய சுதந்திரத்தின் பவள விழா மற்றும் ஸ்வர்ணிம் விஜய் ஆண்டு நினைவு கொண்டாட்டம் நடத்தப்பட்டது.


கோவை: கோவை ஐ.என்.எஸ் அக்ராணியில் இந்திய சுதந்திரத்தின் பவள விழா மற்றும் ஸ்வர்ணிம் விஜய் ஆண்டு நினைவு கொண்டாட்டம் நடத்தப்பட்டது.

இந்திய சுதந்திரத்தின் மகா உற்சவம் மற்றும் சுவர்ணிம் விஜய் ஆண்டு நினைவு கொண்டாட்டத்தின் அங்கமாக கடற்படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கான பட்டறை ஜூலை 17 அன்று நடத்தப்பட்டது. தூய்மையை பராமரிப்பதன் அவசியத்தை வலியுறுத்துதல், குறிப்பாக நடைமுறையிலுள்ள கொரோனா பெருந்தொற்று காலத்தில் எவ்வாறு சுகாதாரமான சுற்றுச்சூழலை பராமரித்தல் வேண்டும் என்பதே இந்நிகழ்வின் முக்கிய நோக்கங்கள் ஆகும்.



1971 - இல் இந்தோ - பாகிஸ்தான் ராணுவ நடவடிக்கைகளில் அடைந்த வெற்றியின் 50 வது ஆண்டு நினைவாக இந்தக் கொண்டாட்டங்கள் நடைபெற்றன. இவ்வாய்ப்பினை ஆரோக்கியமான மற்றும் வலிமையான இந்தியாவின் தேவையை வலியுறுத்துவதற்கும் பயன்படுத்திக் கொள்ளப்பட்டது.



இந்நிகழ்ச்சியில் மூன்று திறந்தவெளி உடற்பயிற்சிக் கூடங்களை ஐ.என்.எஸ் அக்ராணியின் கட்டளை அதிகாரி வி.எஸ்.எம் கமடோர் அசோக் ராய் அவர்கள், கடற்படைப் பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் பேசிய கட்டளை அதிகாரி அக்ராணி நிர்வாகம் சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் உறுதியாக இருப்பதாகவும் அதன் அனைத்து உள்கட்டமைப்பு மற்றும் சமூக வாழ்விலும் பல பசுமை முயற்சிகளை மேற்கொண்டதாகவும் கூறினார்.

இந்நிகழ்வில் கடற்படை சமூகத்தின் தாக்கம் கடற்படை சுற்றுச்சூழலை தூய்மையாகப் பராமரிப்பதற்கு தூண்டுதலாக அமைந்து, அனைத்து கடற்படை பணியாளர்களிடமும் பெருமை உணர்வை ஏற்படுத்தியது. நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உற்சாகமாகப் பங்கேற்றனர்.

இத்துடன் இந்நிகழ்வின் ஓர் அங்கமாக நேவி குழந்தைகள் பள்ளியில் தூய்மை இந்தியா இயக்கம் மற்றும் இந்திய சுதந்திரப் போராட்டத்தின் மைல்கற்கள் என்னும் தலைப்பில் இணையவழி கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், ஆசிரியர்களும் மாணவர்களும் தங்கள் பங்களிப்பை வழங்கி சிறப்பித்தனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...