பொள்ளாச்சி அருகே 15 வயது சிறுமியை பலாத்காரம் செய்த மாற்றுத்திறனாளி போக்சோ சட்டத்தில் கைது..!

கோவை: பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 15 வயது சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்த நிலையில், சிறுமியை பலாத்காரம் செய்த மாற்றுத்திறனாளி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.


கோவை: பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 15 வயது சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்த நிலையில், சிறுமியை பலாத்காரம் செய்த மாற்றுத்திறனாளி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொள்ளாச்சி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் தன் தந்தை இறந்த சூழ்நிலையில், தாயின் அரவணைப்பில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் சிறுமிக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டதால், பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் கர்ப்பமாக இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த நிலையில், சிறுமிக்கு நேற்று ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து மருத்துவர்கள் பொள்ளாச்சி மகளிர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். பின்னர், அங்கு சென்ற போலீசார் விசாரித்ததில், சிறுமியின் வீட்டின் அருகே உள்ள 49 வயதான குருசாமி என்ற கண்பார்வை தெரியாத மாற்றுத்திறனாளி தன்னை கட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்ததாக சிறுமி புகார் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த மாற்றுத்திறனாளி குருசாமி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த மகளிர் போலீசார், அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், சிறுமி மற்றும் அவருக்கு பிறந்த ஆண் குழந்தையை நீதிமன்றம் மூலம் காப்பகத்திற்கு அனுப்பி வைக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...