கோவையில் இளைஞர்களுக்கு போதை ஊசி செலுத்த முயன்ற இரண்டு பேர் கைது... தொடரும் போதை ஊசி கலாசாரம்..!

கோவை: கோவையில் நேற்று மாலை போத்தனூர் பகுதியில் இரண்டு போதை ஆசாமிகள் காரில் வந்தனர். அந்தப் பகுதியில் இருந்த சிறுவர்களை அழைத்து போதை ஊசி செலுத்திக் கொள்ள வலியுறுத்தி உள்ளனர். இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீஸார் இரண்டு பேரை கைது செய்து காரை பறிமுதல் செய்தனர்.


கோவை: கோவையில் நேற்று மாலை போத்தனூர் பகுதியில் இரண்டு போதை ஆசாமிகள் காரில் வந்தனர். அந்தப் பகுதியில் இருந்த சிறுவர்களை அழைத்து போதை ஊசி செலுத்திக் கொள்ள வலியுறுத்தி உள்ளனர். இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீஸார் இரண்டு பேரை கைது செய்து காரை பறிமுதல் செய்தனர்.

கோவை போத்தனூர் இட்டேரி பகுதியில் சிறுவர்களை போதை ஊசி போட்டுக்கொள்ள தூண்டிய இம்ரான்கான், அபுபக்கர் சித்திக் என்ற இருவரை போத்தனூர் காவல் துறையினர் கைது செய்தனர்.

கோவை போத்தனூர் இட்டேரி ஓடை பகுதியில் போதை ஊசி போட்டுக் கொள்வதற்காக கார் மற்றும் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் நேற்று மாலை போதை ஊசி போட்டுக்கொண்டுள்ளனர். போதையில் இருந்த அந்த இளைஞர்கள் இருவரும் அங்கு விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களை அழைத்து போதை ஊசி போட்டுக்கொள்ளத் தூண்டியுள்ளனர்.

இதைப்பார்த்த அப்பகுதிவாசிகள் போத்தனூர் கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் கொடுத்தனர். இந்தத் தகவல் கிடைத்த போத்தனூர் கிராம நிர்வாக அலுவலர் பாலதுரைசாமி தனது உதவியாளருடன் அங்கு சென்ற போது கார் மற்றும் போதை ஊசிகளையும், போதை ஊசி மருத்து தயாரிக்கப் பயன்படுத்தும் மாத்திரைகளையும் போட்டுவிட்டு தப்பி ஓடினர்.

இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் பாலதுரைசாமி விசாரணை மேற்கொண்டபோது, அவர்கள் போத்தனூர் சாய்நகர் பகுதியைச் சேர்ந்த இம்ரான்கான், அபுபக்கர் சித்திக் என்பது தெரியவந்தது. இதனையடுத்து கிராம நிர்வாக அலுவலர் பாலதுரைசாமி போத்தனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகார் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸார் அங்கிருந்த கார் மற்றும் போதை ஊசிகளையும், மாத்திரைகளையும் பறிமுதல் செய்தனர். மேலும், போத்தனூர் பகுதியில் சுற்றித் திரிந்த இளைஞர்கள் இம்ரான்கான், அபுபக்கர் சித்திக் ஆகிய இருவரையும் கைது செய்த போலீஸார் அவர்கள் மீது போதைப் பொருள் ஒழிப்பு சட்டம் மற்றும் சிறார் நீதி சட்டம் ஆகிய இரு பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து இருவரையும் சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...