நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்மழை...சிறுவாணி அணையின் நீர்மட்டம் 26 அடியாக உயர்வு..!

கோவை: சிறுவாணி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், அணையின் நீர்மட்டம் 26 அடியாக கணிசமாக உயர்ந்துள்ளது.


கோவை: சிறுவாணி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், அணையின் நீர்மட்டம் 26 அடியாக கணிசமாக உயர்ந்துள்ளது.

கோவை மாநகராட்சியில் 26 வார்டுகள், நகரை ஒட்டியுள்ள 20-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு சிறுவாணி குடிநீர் நீராதாரமாக உள்ளது. அணையில் இருந்து தினமும் குடிநீருக்காக 10 கோடி லிட்டர் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த ஏப்ரல், மே மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் அணையின் நீர்மட்டமானது, படிப்படியாக குறைந்தது.

இந்நிலையில், தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதால், கடந்த சில நாள்களாக சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அணைக்கு செல்லும் முக்தியாறு, பட்டியலாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இதுகுறித்து, குடிநீர் வடிகால் வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், 'கடந்த வாரத்தில் 24 அடியாக இருந்த சிறுவாணி அணையின் நீர்மட்டம், தொடர் மழையால் நேற்று 26அடியாக உயர்ந்துள்ளது. நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்மழை பெய்யும் பட்சத்தில் ஆகஸ்ட் மாதத்தில் சிறுவாணி அணை முழு கொள்ளளவை எட்டும் வாய்ப்பு உள்ளது' என்றார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...