திருப்பூர்: திருப்பூர் மாநகர பகுதியில் ஊரடங்கு முடிந்து தொழில் நிறுவனங்கள் நடந்து வருகிறது. தொழிலாளர்கள் நிறைந்த பகுதி இந்த பகுதியில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபசாரம் நடத்தி வந்த இருவர் கைது செய்யப்பட்டனர்.

மாநகர போலீஸ் கமிஷனர் வனிதா உத்தரவின் பேரில் துணை கமிஷனர் அரவிந்த் மேற்பார்வையில் வடக்கு உதவி கமிஷனர் வெற்றிவேந்தன் தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் கணேசன் (திருப்பூர் வடக்கு), ஆனந்த் (அனுப்பர்பாளையம்) மற்றும் போலீஸார் கொண்ட தனிப்படையினருக்கு கூத்தம்பாளையம் ஜே.பி. நகர் பகுதியில் ஒரு வீட்டில் விபசாரம் நடப்பதாக தகவல் கிடைத்தது.
இதைத் தொடர்ந்து தனிப்படையினர் நேற்று சம்பந்தப்பட்ட வீட்டில் அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது அந்த வீட்டில் விபசாரம் நடப்பது தெரிய வந்தது. அங்கிருந்து 45 வயது, 25 வயது, 21 வயதுடைய மூன்று பெண்களை போலீஸார் மீட்டனர்.

மேலும் அவர்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய பல்லடம் அருள் புரத்தை சேர்ந்த வசந்த் (வயது 41), தேனி மாவட்டம் சித்தார் பட்டியை சேர்ந்த விக்னேஷ் (21) ஆகியோரை பிடித்தனர். விசாரணையில் அவர்கள் மசாஜ் சென்டர் என்ற பெயரில் வாடிக்கையாளர்களுக்கு அழைப்பு விடுத்து, வீட்டில் விபசாரம் நடத்தியது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து வசந்த், விக்னேஷ் ஆகிய 2 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து 2 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.
மீட்கப்பட்ட பெண்களை காப்பகத்தில் போலீஸார் ஒப்படைத்தனர். சிறப்பாக செயல்பட்ட தனிப்படையினரை துணை கமிஷனர் அரவிந்த் பாராட்டினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது, திருப்பூர் மாநகர பகுதியில் ஊரடங்கு முடிந்து தொழில் நிறுவனங்கள் நடந்து வருகிறது. தொழிலாளர் நிறைந்த பகுதி என்பதால் மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபசாரம் நடப்பதாக தொடர்ந்து புகார்கள் வருகிறது. பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்தும் நபர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவின்பேரில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நடவடிக்கை தொடரும் என்றார்.