திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் திருமூர்த்திமலை அணை பூங்கா சுற்றுலா மேம்பாட்டு திட்டத்தினை திருப்பூர் மாவட்ட சுற்றுலா அதிகாரி T.அரவிந்தகுமார் பல்வேறு அரசு துறைகளுடன் இணைந்து திருமூர்த்தி மலை சுற்றுலாத்தலத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை அருகே மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் திருமூர்த்தி மலை அமைந்துள்ளது. மலைமேல் 960 மீட்டர் உயரத்தில் மூலிகை குணம் நிறைந்த பஞ்சலிங்கம் அருவி அமைந்துள்ளது. மலையடிவாரத்தில் பாலாற்றின் கரையில் சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மும்மூர்த்திகள் அடங்கிய திருமூர்த்திமலையில் அமணலிங்கேஸ்வரர் கோயில், திருமூர்த்திமலை அணை பூங்கா படகு இல்லம், நீச்சல் குளம், வண்ணமீன் காட்சியகம், விளையாட்டுப் பூங்கா என பல்வேறு அம்சங்கள் உள்ளன. இந்த சுற்றுலா தலங்களில் அணை பூங்கா அமைப்பது குறித்து மாவட்ட சுற்றுலா அதிகாரி அரவிந்தகுமார் பல்வேறு துறைகளுடன் இணைந்து ஆய்வு மேற்கொண்டார்.

திருமூர்த்திமலை அணை பூங்கா
தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறை தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு அணை பகுதிகளில் உள்ள அணை பூங்காக்களை மேம்படுத்தி சுற்றுலாவை வளர்ச்சி அடையச் செய்ய திட்டம் தீட்டியுள்ளது.. அதன் தொடர்ச்சியாக இங்கு மாவட்ட சுற்றுலாத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
திருமூர்த்திமலை அணைப்பகுதி சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் அழகிய தோற்றத்தில் அமைந்துள்ளது. திருமூர்த்திமலை அணைப் பகுதியை ஒட்டிய 2700 மீட்டர் நீளம் கொண்ட பொதுப்பணித்துறை நிலத்தில் ஓர் அழகிய அணை பூங்கா கட்டுவதற்கான திட்ட கருத்துரு கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனை மீண்டும் செயல்படுத்துவதற்க்கான ஆலோசனை திருமூர்த்திமலை அணையின் கோட்ட செயற்பொறியாளர் திருமூர்த்தி மற்றும் செயற்பொறியாளர் கோபி மற்றும் உதவி பொறியாளர் சண்முகம் ஆகியோருடன் சுற்றுலாத்துறை அதிகாரிகள் நடத்தினர்.

அரசின் கவனத்திற்கு இந்தத் திட்டத்தை கொண்டு சென்று நிதியுதவி பெற்று சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் அழகிய அணை பூங்காவை அமைத்திட சுற்றுலாத்துறை சார்பாக முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் திருப்பூர் மாவட்ட சுற்றுலா அதிகாரி அரவிந்த குமார் கூறினார்.
இந்த ஆய்வின்போது மாவட்ட உதவி சுற்றுலா அலுவலர் த.செல்வராஜ், சுற்றுலா ஆர்வலர்கள் சண்முகராஜ், ஜவஹர், பிரசாந்த், பாலாஜி மற்றும் பொன்ராஜ் உடன் இருந்தனர்.