திருப்பூர்: பில்லூர் கூட்டு குடிநீர் திட்டத்தில் வழங்கப்படும் குடிநீருக்கான சிம்கார்டு பொருத்திய டிஜிட்டல் மீட்டர் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் சட்டமன்ற தொகுதி பொங்கலூர் ஒன்றியத்திற்கு பில்லூர் கூட்டு குடிநீர் திட்டத்தில் இருந்து தினசரி 35.48 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வருகின்றது. பொங்கலூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட மாதப்பூர், வடுகபாளையம், மந்திரிபாளையம், கேத்தனூர் கிராமங்களுக்கு வழங்கப்படும் குடிநீர் அளவு செய்வதற்கு 3 சிம் கார்டுகள் உள்ள டிஜிட்டர் மீட்டர் பொருத்தும் பணி இன்று துவங்கியது.
இந்த சிம்கார்டுகள் கூட்டு குடிநீர் இளநிலை பொறியாளர், ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஊராட்சி செயலாளருக்கு வழங்கப்படும். சிம் கார்டு மூலம் தினசரி வழங்கப்படும் குடிநீரின் அளவு மூவருக்கும் குறுந்தகவல் மூலம் சென்று விடும். இந்த டிஜிட்டல் மீட்டர் பொருத்தும் பணி கேத்தனூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஒன்பது குக்கிராமங்களுக்கு குடிநீர் வழங்கும் வடுகபாளையத்தில் உள்ள குடிநீர் நீரேற்றும் நிலையத்தில் நடைபெற்றது.
இந்த பணியினை பொங்கலூர் தி.மு.க ஒன்றிய தலைவர் குமார் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த பணிகள் குறித்து குடிநீர் வரிகால் வாரிய அதிகாரிகளிடம் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. நகராட்சி முதல் குக்கிராமங்கள் வரை எந்த விதமான தடங்கலும் இன்றி குடிநீர் செல்ல நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என அரசு அதிகாரிகளுக்கு பொங்கலூர் ஒன்றிய தலைவர் குமார் ஆலோசனைகள் வழங்கினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் கேத்தனூர் ஊராட்சி மன்ற தலைவர் சித்ரா ஹரிகோபால் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.