ஆடி முதல் நாளில் கூட்டமாக காணப்படும் பிரசித்தி பெற்ற கோவை பேரூர் படிதுறையில் மக்கள் வருகை குறைவு..!

கோவை: ஆடி முதல் நாளை முன்னிட்டு கூட்டமாக காணப்படும் பிரசித்திபெற்ற கோவை பேரூர் படிதுறையில் மக்கள் வருகை குறைவாகவே இருந்தது.


கோவை: ஆடி முதல் நாளை முன்னிட்டு கூட்டமாக காணப்படும் பிரசித்திபெற்ற கோவை பேரூர் படிதுறையில் மக்கள் வருகை குறைவாகவே இருந்தது.

முக்தி தலம் என்று அழைக்கப்படும் கோவை பேரூரில் புகழ்பெற்ற பட்டீசுவரர் கோவில் உள்ளது. இந்த கோவில் அருகே செல்லும் நொய்யல் ஆற்றில் படித்துறை உள்ளது. இந்த ஆற்றின் படித்துறையில் இறந்தவர்களுக்கு திதி கொடுத்தால் அவர்களுக்கு மறுபிறவி இல்லை என்றும், அவர்கள் ஈசனிடம் சென்றுவிடுவார்கள் என்பதும் ஐதீகம்.

இதனால் ஒவ்வொரு ஆண்டும் ஆடி அமாவாசை மற்றும் ஆடிப்பெருக்கு அன்று இந்த படித்துறையில் இறந்தவர்களுக்கு திதி கொடுக்க ஏராளமான பக்தர்கள் வந்து திதி கொடுத்து தர்ப்பண பூஜை செய்வது உண்டு. கோவை மட்டுமின்றி அண்டை மாவட்டங்களான திருப்பூர், நீலகிரி, கேரளாவில் இருந்தும் இதற்காக முந்தைய நாளே பக்தர்கள் பேரூருக்கு வந்து விடுவார்கள்.

கடந்தாண்டு கொரோனா பொதுமுடக்கத்தால், பேரூர் படித்துறையில் ஆடி அமாவாசை மற்றும் ஆடிப்பெருக்குக்கு ஏராளமான பக்தர்கள் கூடுவார்கள் என்பதால், அன்றைய தினம் அங்கு பக்தர்கள் வர தடை விதிக்கப்பட்டது. ஆனால், இந்தாண்டு எந்த கட்டுப்பாடும் இல்லாத நிலையிலும், மக்கள் வருகை மிக குறைந்த அளவிலேயே வந்தனர்.

கொரோனா காரணமாக கூட்டத்தை தவிர்த்து 5 நபர்கள் மட்டுமே திதி கொடுக்க பங்கேற்கவும், குறிப்பிட்ட இடைவெளி விட்டு முககவசம் அணிந்து தான் பூஜைகள் நடைபெறவும், பேரூரில் திதி கொடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இது தொடர்பான தகவல் தெரியாததால் மக்கள் கூட்டம் குறைவாக உள்ளதாக சொல்கின்றனர் கோவில் அதிகாரிகள்.

மேலும், படிதுறைக்கு அருகிலுள்ள அம்மன் தோப்பு பகுதி மற்றும் ஆற்றுமேடை விநாயகர் கோவிலை சுற்றி உள்ள பகுதிகளில் முன்னோர்களுக்கு வழங்கக்கூடிய தர்ப்பணமும், பரிகார பூஜைகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...