வால்பாறைக்கு நீண்ட நாட்களுக்குப் பிறகு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு - வியாபாரிகள் மகிழ்ச்சி!

கோவை: நீண்ட நாட்களுக்குப்பின் வால்பாறைக்கு சுற்றுலா பயணிகள் வருகை தருவதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


கோவை: நீண்ட நாட்களுக்குப்பின் வால்பாறைக்கு சுற்றுலா பயணிகள் வருகை தருவதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கோவை மாவட்டம் வால்பாறை ஒரு சிறந்த சுற்றுலா தலமாக விளங்குகிறது. இங்கு பசுமை போர்த்திய தேயிலைத் தோட்டங்கள், சிற்றாறுகள், ஓடைகள், நீர்வீழ்ச்சிகள், ஆறுகள் மற்றும் அணைகளை பார்வையிட்டு ரசிக்க தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, பாண்டிச்சேரி மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில், கொரானா தொற்றின் காரணமாக சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது கொரானா தொற்று கட்டுப்பாட்டுக்குள் வந்ததையடுத்து தமிழக அரசு பொது போக்குவரத்துக்கு அனுமதி அளித்துள்ளது. மேலும் சுற்றுலா பயணிகள் வந்து செல்ல அனுமதி வழங்கப் பட்டுள்ளது.



இதன் காரணமாக, வால்பாறை பகுதிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து குவிகின்றனர். வால்பாறையில் உள்ள கூழாங்கல் ஆற்றில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்கின்றனர். வால்பாறைக்கு சுற்றுலா பயணிகள் வருகை இல்லாததால் வியாபாரிகள் பெரிதும் பாதிப்படைந்திருந்தனர். தற்போது சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பால் வியாபாரிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...