திருப்பூரில் முறையான ஆவணங்கள் இன்றி குடியிருந்த வங்கதேச நாட்டை சேர்ந்த நபர் கைது!

திருப்பூர்: திருப்பூரில் முறையான ஆவணங்கள் இன்றி குடியிருந்த வங்கதேச நாட்டை சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டார்.


திருப்பூர்: திருப்பூரில் முறையான ஆவணங்கள் இன்றி குடியிருந்த வங்கதேச நாட்டை சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டார்.

மேற்கு வங்க மாநிலம் வடக்கு 24 பராகனாஸ் மாவட்டத்தைச் சேர்ந்தவர் முகமது சொஹல் ராணா (28). இவர் திருப்பூர் பாண்டியன் நகர் பின்புறம் கடந்த இரண்டு ஆண்டுகளாக வசித்து வந்தார். அதே பகுதியில் தனியார் பின்னலாடை நிறுவனத்தில் தையல் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.



இந்த நிலையில், அவர் வங்கதேச நாட்டை சேர்ந்தவர் என சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து, திருமுருகன்பூண்டி போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் வங்கதேச நாட்டை சேர்ந்த நவஹாலே மாவட்டத்தை சேர்ந்தவர் முகமது சொஹல் ராணா என்பது தெரியவந்தது. அவர் மேற்கு வங்க மாநிலம் வடக்கு 24 பராகனாஸ் மாவட்ட முகவரி போலியானது என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து, அவரை திருமுருகன்பூண்டி காவல்துறையினர் நேற்று இரவு கைது செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். அவருடன் தொடர்பில் இருந்த பிற நபர்கள் யாரேனும் தங்கியிருந்தார்களா? என்பது தொடர்பாகவும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...