வாட்ஸ் அப்பில் அறிமுகமாகி, பெண் நண்பர் போல் பேசி, பணம் நூதன மோசடி... கோவை சைபர் கிரைம் போலீஸார் எச்சரிக்கை..!

கோவை: வாட்ஸ் அப்பில் அறிமுகமாகி, பெண் நண்பர் போல் பேசி, கலால் வரி 9.50 லட்சம் கட்ட வைத்து, நூதன மோசடி நடைபெறுகிறது. சைபர் கிரைம் போலீஸார் மக்களுக்கு நம்பாதீர்கள், நம்பி ஏமாறாதீர்கள் என எச்சரிக்கை செய்கின்றனர்.


கோவை: வாட்ஸ் அப்பில் அறிமுகமாகி, பெண் நண்பர் போல் பேசி, கலால் வரி 9.50 லட்சம் கட்ட வைத்து, நூதன மோசடி நடைபெறுகிறது. சைபர் கிரைம் போலீஸார் மக்களுக்கு நம்பாதீர்கள், நம்பி ஏமாறாதீர்கள் என எச்சரிக்கை செய்கின்றனர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியில் வசிக்கும் சரவணன் என்பவர் முகநூல் வாயிலாக United Kingdom-ல் வசிக்கும் (Sarah Backy)(ID) என்ற பெண்ணிடம் நட்பு ஏற்பட்டு நாளடைவில் வாட்ஸ்அப் மூலம் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டுள்ளனர். இந்தநிலையில் Sarah Backy சரவணனிடம் 20,000 pound மதிப்புள்ள தங்க ஆபரணங்கள் பரிசாக தருவதாகக் கூறி, அப்பரிசுப் பொருளைப் பெற வேண்டுமென்றால் கலால் வரி தொகையை நீங்கள் கட்ட வேண்டியிருக்கும் என்று கூறியுள்ளார்.

அதன் பின்னர், சரவணனுக்கு கலால் வரித்துறை அதிகாரி பேசுவதுபோல் தொலைபேசி மூலம் ஒருவர் பேசி பணம் கட்ட கூறியுள்ளார். அதனை நம்பி சரவணன் தொலைபேசியில் கலால் வரித்துறை அதிகாரி கூறிய வங்கிக் கணக்கில் ரூ.9,50,000/- பணத்தைக் கட்டியுள்ளார். அதன் பின்னர் சரவணனுக்கு அவர்கள் கூறியபடி பரிசுப் பொருளும் கிடைக்கவில்லை. அதன்பின்னர், Sarah Backy-யை தொடர்பு கொள்ள முயன்றபோது, அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. மேற்படி முகநூல் பக்கமும் போலியானது என்பது தெரியவந்தது. இது சம்மந்தமாக சரவணன் கோவை மாவட்டக் காவல் அலுவலகத்தில் இயங்கி வரும் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் இன்று புகார் அளித்ததின் பேரில் கோவை மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

காவல் துறையினர் சைபர் குற்றங்கள் சம்மந்தமாக பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் நிலையிலும் பொதுமக்கள் விழிப்புணர்வு இல்லாமல் இதுபோல் ஏமாந்து பணத்தைப் பறி கொடுக்கின்றனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...