கோவை: கோவை ரயில் நிலையத்திற்கு இன்று காலை வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபரை போலீஸார் கைது செய்தனர். அவரிடம் மிரட்டல் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இன்று காலை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் ஒருவர் போன் செய்தார். அதனை எடுத்து பேசிய போது, எதிர்முனையில் பேசிய ஒருவர், “நான் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்தேன். அப்போது கேரளாவைச் சேர்ந்த இரண்டு பேர் கோவை ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வைக்கப் போவதாக பேசிக்கொண்டிருந்தனர். அதை நான் கேட்டேன்'' என கூறினார். “அதனால் நான் உங்களுக்கு தகவல் தெரிவிக்கிறேன்'' என கூறி போனை வைத்து விட்டார். இதுகுறித்த தகவல் உடனே உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து அங்கு வெடிகுண்டு கண்டுபிடிப்பு செயலிழப்பு பிரிவு போலீஸார் மற்றும் மத்திய ரயில்வே பாதுகாப்பு படை வெடிகுண்டு கண்காணிப்பு பிரிவு போலீஸார் மோப்ப நாய் உதவியுடன் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை ரயில் நிலையத்தில் உள்ளே உள்ள பயணிகள், அவர்களது உடமைகள் அனைத்தும் தீவிர சோதனை செய்யபட்டு வருகிறது.
அதனால் கோவை ரயில் நிலையம் பரபரப்பாக காணப்படுகிறது. மேலும் போன் செய்த நபர் யார் என்று அழைப்பு வந்த செல்போன் எண் குறித்து விசாரணை நடத்தினர். அதில் வடமதுரை சித்ரா நகரை சேர்ந்த செந்தில்குமார்(40) என்பவர் போன் செய்து ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில் செந்தில்குமாரின் மனைவி கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொரோனாவால் உயிரிழந்தார் என்பதும் அதிலிருந்து செந்தில்குமார் மனநிலை பாதிக்கப்பட்டது போல் இருந்தார் என்பதும் தெரியவந்தது. .மேலும், இதுகுறித்து ரயில்வே பாதுகாப்பு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.