கோவை: கேரள மாநிலத்தில் ஜிகா வைரஸ் எதிரொலியாக பொள்ளாச்சியில் தமிழக கேரள எல்லைப் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடிகளில் சார் ஆட்சியர் ஆய்வு நடத்தினார்.

கேரள மாநிலத்தில் கொசுவின் மூலமாக பரவும் ஜிகா வைரஸ் நோய் பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. இதனால் தமிழக - கேரள எல்லைப் பகுதியான கோவை மற்றும் பொள்ளாச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில், உள்ள சோதனைச் சாவடிகளில் தீவிர கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
பொள்ளாச்சியை அடுத்துள்ள நடுப்புணி, மீனாட்சிபுரம், கோபாலபுரம் உள்ளிட சோதனைச் சாவடிகளில் மருத்துவ அலுவலர் தலைமையில், வருவாய் துறை, ஊராட்சித் துறை, காவல்துறை அடங்கிய சிறப்பு கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. கேரளாவில் இருந்து பொள்ளாச்சிக்கு வரும் பயணிகள் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றனர்.

இந்நிலையில், பொள்ளாச்சி அருகே உள்ள நடுப்புணி, கோபாலபுரம், மீனாட்சிபுரம் ஆகிய சோதனை சாவடிகளில், உள்ள மருத்துவ கண்காணிப்பு குழுக்கள் சார்பில் நடத்தப்படும் தணிக்கைகள் குறித்து, இன்று பொள்ளாச்சி சார் ஆட்சியர் தாக்கரே சுபம் ஞான தேவ் ராவ் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

மேலும், கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் பயணிகள் இ-பாஸ் இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் என்றும், தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு சென்று மீண்டும் தமிழகம் திரும்பும் பயணிகளுக்கும் கட்டாயம் இ-பாஸ் முறையை கடைபிடிக்க வேண்டும் என்றும், அதிகாரிகளுக்கு சார் ஆட்சியர் சார்பில் அறிவுரை வழங்கப்பட்டது.