பக்ரீத் பண்டிகை எதிரொலி: பொள்ளாச்சி மாட்டு சந்தையில் ஒரே நாளில் ரூ. 2 கோடிக்கு வியாபாரம்..!

கோவை: பக்ரீத் பண்டிகை எதிரொலியாக பொள்ளாச்சி மாட்டு சந்தையில் ஒரே நாளில் இரண்டு கோடிக்கு வியாபாரம் நடந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.


கோவை: பொள்ளாச்சி மாட்டு சந்தையில் பக்ரீத் பண்டிகையையொட்டி, ஒரே நாளில் இரண்டு கோடி ரூபாய்க்கு வியாபாரம் நடைபெற்றது.

கோவை மாவட்டம், பொள்ளாச்சி மாட்டு சந்தை, வாரந்தோறும் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் நடக்கிறது. ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து, நேற்று சந்தைக்கு மாடுகளின் வரத்து அதிகரித்து காணப்பட்டது. மழை பெய்தாலும் விற்பனை விறுவிறுப்பாக நடந்தது.

இதனையடுத்து, மாட்டு வியாபாரிகள் கூறியதாவது:

பொள்ளாச்சி மாட்டு சந்தைக்கு, மொத்தம் 1,500 மாடுகள் வரத்து இருந்தது. பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு வியாபாரம் விறுவிறுப்பாக நடந்தது. நாட்டு காளை, 50 - 55 ஆயிரம் ரூபாய்; நாட்டு பசு, 30 - 35 ஆயிரம்; நாட்டு எருமை, 40 - 45 ஆயிரம்; முரா, 55 - 60 ஆயிரம்; ஜெர்சி, 35 - 40 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

மொத்தம், இரண்டு கோடிக்கு ரூபாய்க்கு வர்த்தகம் நடந்ததாக இவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...