முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா படத்தை கூட்டரங்கில் பொருத்த வேண்டும்: கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றிய குழு கூட்டத்தில் அதிமுக உறுப்பினர்கள் வலியுறுத்தல்

கோவை: கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்துகொண்ட அதிமுக உறுப்பினர்கள், கூட்டரங்கில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா படத்தை பொருத்த வேண்டும் என்று வலியுறுத்தினர்.


கோவை: கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்துகொண்ட அதிமுக உறுப்பினர்கள், கூட்டரங்கில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா படத்தை பொருத்த வேண்டும் என்று வலியுறுத்தினர்.



கோவை கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம், ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.

ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் நாகராணி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஒன்றியக் குழு துணைத் தலைவர் துரை முன்னிலை வகித்தார்.

கிணத்துக்கடவு ஆணையாளர் கணேசன் வரவேற்றுப் பேசினார்.

இக்கூட்டத்தில் அதிமுக ஒன்றிய கவுன்சிலர்கள் பேசியதாவது:- ஐந்து மாதத்திற்கு முன்பு கிராம ஊராட்சிகளில் வீட்டு மனைகளுக்கு அங்கீகாரம் கேட்டு மனு கொடுத்து இதுவரை அங்கீகாரம் கிடைக்காமல் கிராம மக்கள் அவதி அடைந்து வருகின்றனர். அவர்களுக்கு உடனடியாக அங்கீகாரம் அளிக்க வேண்டும்.

கிராமப் பகுதியில் பொதுமக்களுக்கு தட்டுப்பாடில்லாமல் தடுப்பூசி போட வேண்டும். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் படத்தை கூட்டரங்கில் பொருத்த வேண்டும்.



தேவனாம்பாளையம் புதுக்காலனியில் மேல்நிலைத் தொட்டி பழுதடைந்து அபாய நிலையில் உள்ளது. அதை சரி செய்ய வேண்டும். ஜல் ஜீவன் திட்டத்தின்கீழ் கிராமந்தோறும் பாகுபாடின்றி குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும் என்றனர்.

அதுபோல், திமுக ஒன்றிய கவுன்சிலர்கள் பேசும்போது:-

அதிமுக ஆட்சியின் போது ஒன்றியக் குழுக் கூட்ட அரங்கில் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் படம் பொருத்தப்படவில்லை. அதனால், தற்போது முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா படத்தை பொருத்தக் கூடாது என எதிர்ப்புத் தெரிவித்தனர்.

இக்கூட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் எல்.ஜே.ஜே.ஜெகன், கவிதா, கலாமணி, மகேந்திரன், மஞ்சுளா காளியம்மாள், கலாமணி வரதராஜன், ராமசாமி, ராஜேஸ்வரி, வசந்தி, வள்ளிநாயகம், தென்னரசு, சத்தியபாமா, கலைக்குமார் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

முடிவில் வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) விவேகானந்தன் நன்றி கூறினார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...