கோவை: கோவை கிணத்துக்கடவு பகுதியில் இன்று காலை ஏற்பட்ட பனிமூட்டத்தால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக தென்மேற்கு பருவ மழை விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதனால் கிணத்துக்கடவு பகுதி முழுவதும் குளிர்ந்த நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், இன்று அதிகாலை தீடிரென மூடுபனி ஏற்பட்டது. இதன் காரணமாக கோவை பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் எதிரே வரும் வாகனம் தெரியாத அளவிற்கு பனிமூட்டம் காணப்பட்டது.

இதனால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கு எரிய விட்டு சென்றனர்.

கிணத்துக்கடவு பகுதி பச்சை பசேல் என காணப்பட்ட நிலையில், இன்று காலை ஏற்பட்ட பனிமூட்டாதால் வெள்ளை நிறமாக காணப்பட்டது.