கோவை: கிணத்துக்கடவு சென்றான்பாளையம் பகுதியில் தகராறு முற்றிய நிலையில் கூலித் தொழிலாளியை வாலிபர் கத்தியால் குத்தினார். இதனைத் தொடர்ந்து வாலிபர் போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள சென்றான்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பிரபு(வயது 23) கூலி வேலை செய்து வருகிறார்.
இந்தநிலையில், கடந்த 13-ஆம் தேதி சென்றாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த 25 வயதான சிவக்குமார் என்ற வாலிபருக்கும் கூலி தொழிலாளியான பிரபுவுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தகராறில் ஈடுபட்ட இருவரையும் பிரபுவின் பெற்றோர்கள் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
அதன்பிறகு, கடந்த 15ஆம் தேதி மதியம் சென்றாம்பாளையம் பகுதியில் உள்ள கழிப்பிடம் அருகே மீண்டும் சிவகுமார் பிரபுவிடம் தகராறில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
இதில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பிரபுவை சிவகுமார் முதுகில் குத்தினார். இதனால், காயமடைந்த பிரபுவை அங்கிருந்தவர்கள் மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் பிரபு கொடுத்த புகாரின் பேரில் கத்தியால் குத்திய சிவகுமார் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.