கோவையில் மதக்கலவரத்தை தூண்டும் விதமாக பேசி வரும் இந்து முன்னணி நிர்வாகிகளை கைது செய்ய வேண்டும் - C A J வெல்ஃபேர் அசோசியேஷன்

கோவை: கோவையில் தொடர்ந்து மதக்கலவரத்தை தூண்டும் விதமாக பேசிக்கொண்டு வரும் இந்து முன்னணி நிர்வாகிகளை கைது செய்ய வேண்டும் என்று C A J வெல்ஃபேர் அசோசியேஷன் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.


கோவை: கோவையில் தொடர்ந்து மதக்கலவரத்தை தூண்டும் விதமாக பேசிக்கொண்டு வரும் இந்து முன்னணி நிர்வாகிகளை கைது செய்ய வேண்டும் என்று C A J வெல்ஃபேர் அசோசியேஷன் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக C A J வெல்ஃபேர் அசோசியேஷன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

கோவையில் அனைத்து மதத்தினரும் அமைதியாக வாழ்ந்து வரும் மக்கள் மத்தியில் கலவரத்தை தூண்டும் விதமாக இந்து முன்னணி நிர்வாகிகள் பேசி வருகின்றனர்.

கோவையில் உள்ள அத்தார் ஜமாத் பள்ளிவாசலுக்குச் சொந்தமான பெரிய கடை வீதியில் அமைந்துள்ள ஜமேஷ தர்கா முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று இந்து முன்னணி அறிவிப்பு செய்துள்ளது. காவல்துறை உடனடியாக இந்த போராட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும்.

கோவையில் 300 வருடங்கள் பழமை வாய்ந்த அத்தார் ஜமாத் பள்ளிவாசலுக்கு சொந்தமான பெரிய கடை வீதியில் அமைந்துள்ள தர்காவுக்கு அனைத்து ஆவணங்களும் உள்ளது. பெரிய கடைவீதியில் தற்போது உள்ள சாலை அத்தார் ஜமாத் பள்ளிவாசலுக்குச் சொந்தமானது. மக்கள் பயன்பாட்டிற்கு அன்றைய காலகட்டத்தில் அரசாங்கத்துக்கு அத்தர் ஜமாத் பள்ளிவாசல் சார்பாக வழங்கப்பட்டது என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம்

வரலாறு தெரியாமல் அவர்கள் தற்போது பேசிக்கொண்டே இருக்கிறார்கள். ஆகையால் கோவை மாநகர காவல்துறை, தமிழக அரசும் இவர்களை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...