கோவை: தமிழகத்தில் நீட் தேர்வு விவகாரத்தில் மாணவ-மாணவிகளை மு க ஸ்டாலின் குழப்புவதாக பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் ஜெயராமன் குற்றம்சாட்டியுள்ளார்.

கொரோனோ வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் திறக்கப்படாமல் இருந்தது.

தற்போது கொரோனோ பரவல் குறைந்து வருவதால் இன்று சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் திறக்கப்பட்டு சட்டமன்ற உறுப்பினர் ஜெயராமன் குத்துவிளக்கேற்றி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியின்போது, திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று தேர்தல் பிரச்சாரத்தின் போது மு க ஸ்டாலின் வாக்குறுதி அளித்தார். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நீட் தேர்வு உண்டு அல்லது இல்லை என்று சொல்லாமல் லட்சக்கணக்கான மாணவர்களின் வாழ்க்கையை பாதிக்கக்கூடிய வகையில் குழப்பிக் கொண்டே இருக்கிறார். கடந்த அதிமுக ஆட்சியில் நீட் தேர்வுக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
எனவே, முதல்வர் ஸ்டாலின் நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.