கோவை: வால்பாறை பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வருகிறது. இடிந்து விழும் நிலையில் உள்ள நடைபாதைப் படிகட்டுகளை சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் கன மழை தொடர்ந்து பெய்து வருகிறது. மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. வால்பாறை பகுதியில் அண்ணாநகர், கக்கன் காலனி, எம்ஜிஆர் நகர், துளசிங்க நகர் போன்ற பகுதிகளில் குடியிருப்புகள், வீடுகள் அடுக்கடுக்காக கட்டப்பட்டுள்ளது. மழைக்காலங்களில் போதுமான பாதுகாப்பு இன்றி தடுப்பு சுவர்களும் படிக்கட்டுகளும் உள்ளன கக்கன் காலனி தண்ணீர் டேங்க் பகுதி, பொதுமக்கள் நடந்து செல்லும் படிக்கட்டுகள் ஆபத்தான நிலையில் உள்ளது. மழையின் காரணமாக படிக்கட்டு இடிந்து விழும் நிலையில் இருப்பதால், அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். அப்பகுதி வழியே நடக்காமல் மாற்று வழியில் நடந்து செல்கின்றனர். உடனடியாக நகராட்சி நிர்வாகம் இடியும் நிலையில் உள்ள நடைபாதையை சரிசெய்ய அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.