கூடுதல் தடுப்பூசிகளை வழங்க கோரி ஒன்றிய அரசுக்கு காலி தடுப்பூசி அனுப்பி வைத்து பொள்ளாச்சியில் அனைத்து கட்சியினர் நூதன போராட்டம்!

கோவை: தமிழகத்துக்கு கூடுதல் தடுப்பூசிகளை வழங்க கோரி, பொள்ளாச்சியில் இருந்து ஒன்றிய அரசுக்கு காலி தடுப்பூசி அனுப்பி அனைத்து கட்சியினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: தமிழகத்துக்கு கூடுதல் தடுப்பூசிகளை வழங்க கோரி, பொள்ளாச்சியில் இருந்து ஒன்றிய அரசுக்கு காலி தடுப்பூசி அனுப்பி அனைத்து கட்சியினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.



தமிழகத்துக்கு கூடுதலாக தடுப்பூசிகளை வழங்க வலியுறுத்தி மதிமுக, கம்யூனிஸ்ட், தந்தை பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் சார்பில், உடுமலை சாலையில் உள்ள தலைமை தபால் நிலையத்தில், ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் பிரதமர் மோடிக்கு காலி சிரிஞ்சுகளை அனுப்பி நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



பெரியார் திராவிட கழகத்தின் வெளியீட்டு செயலாளர் மனோகரன் தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில், ஒன்றிய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த 1 கோடி தடுப்பூசிகள் வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார். ஆனால், ஒன்றிய அரசு போதுமான தடுப்பூசிகளை தமிழகத்திற்கு வழங்காமல், வேறு மாநிலங்களுக்கு வழங்கி வருகிறது. தமிழகத்தில் தடுப்பூசி கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

எனவே, ஒன்றிய அரசு உடனடியாக தமிழகத்திற்கு கூடுதல் தடுப்பூசிகளை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...