கோவை: தமிழகம் முழுவதும் 4.28 கோடி ரூபாய் மதிப்பில், 563 மெட்ரிக் டன் தரமற்ற விதைகள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில், தற்போது நெல் சாகுபடி பணி தீவிரமாக நடந்து வருகிறது. ஆடிப்பட்டத்தில் மக்காச்சோளம், பருத்தி, சிறுதானிய பயிர்கள், எண்ணெய் வித்துக்கள் மற்றும் காய்கறி பயிர்கள் சாகுபடி செய்யவுள்ள நிலையில், விதையின் தரத்தை உறுதி செய்யும் நோக்கில், ஆய்வு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
அதன்படி, அனைத்து மாவட்டங்களிலும் 17 ஆயிரத்து 848 ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, விற்பனைக்கு வைக்கப்பட்ட பல்வேறு பயிர்களில் இருந்து, 9,779 விதை மாதிரிகள் எடுக்கப்பட்டன. இவை பகுபாய்வுக்கு அனுப்பப்பட்டது.
ஆய்வு முடிவுகளின் அடிப்படையில், 4.28 கோடி ரூபாய் மதிப்புள்ள, 563 மெட்ரிக் டன் விதை விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று துறை இயக்குனர் சுப்பையன் கூறுகையில், ''தரமற்ற விதை உற்பத்தி செய்தவர்கள், விற்பனையாளர்கள் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விதை உற்பத்தியாளர்கள், உரிய விற்பனை பட்டியல் மற்றும் பகுப்பாய்வு முடிவுகளுடன் வினியோகஸ்தர்களுக்கு அனுப்பிவைக்க வேண்டும். உரிமம் பெற்ற நிலையங்களில் மட்டுமே, விவசாயிகள் கொள்முதல் செய்ய வேண்டும். கொள்முதல் செய்த விற்பனை பட்டியலை அறுவடை காலம் முடியும் வரை வைத்திருக்கவேண்டும்,'' என்று தெரிவித்தார்.