திருப்பூரில் எச்சில் தொட்டு பயணச் சீட்டை வழங்கிய அரசு பேருந்து நடத்துநருக்குப் பேருந்து நிறுத்த நிழற்குடையில் வைத்தே கொரோனா பரிசோதனை!

திருப்பூர்: கோவை - திருப்பூர் பேருந்தில் பயணிகளுக்கு எச்சில் தொட்டு பயணச் சீட்டை வழங்கிய அரசு பேருந்து நடத்துனருக்கு திருப்பூர் பேருந்து நிறுத்த நிழற்குடையில் வைத்தே கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.


திருப்பூர்: கோவை - திருப்பூர் பேருந்தில் பயணிகளுக்கு எச்சில் தொட்டு பயணச் சீட்டை வழங்கிய அரசு பேருந்து நடத்துனருக்கு திருப்பூர் பேருந்து நிறுத்த நிழற்குடையில் வைத்தே கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

கொரோனா பரவல் குறைய துவங்கியதால் சமீபத்தில் அரசு கொடுத்த தளர்வில் பொது போக்குவரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது. தளர்வுகள் கொடுக்கப்பட்டாலும் தொற்றின் எண்ணிக்கை அதிகரிக்காத வகையில் சில கட்டுப்பாடுகளுடன் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இன்று காலை கோவையில் இருந்து திருப்பூருக்கு அரசு பேருந்து ஒன்று 57 பயணிகளுடன் வந்துள்ளது. பேருந்தில், நடத்துனர் பயணிகளுக்கு டிக்கெட் (பயணச்சீட்டு) வழங்கும் போது, எச்சில் தொட்டு பயணச்சீட்டை கிழித்து வழங்கியுள்ளார்.

இதை பார்த்த பேருந்தில் பயணித்தவர்கள், கொரோனா காலகட்டம், இதுபோல எச்சில் தொட்டு பயணிக்க வேண்டாம் என்று கூறியுள்ளனர். அதனை பொருட்படுத்தாமல் நடத்துனர் மீண்டும் மீண்டும் அதேபோல் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் பயணி ஒருவர் திருப்பூர் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு இது குறித்து தகவல் கொடுத்துள்ளார்.

இதையடுத்து, பேருந்து திருப்பூர் வந்தடைவதற்கு முன்பாகவே, கொரோனா பரிசோதனை செய்யும் நபர்களுடன் தயார் நிலையில் இருந்துள்ளனர். அரசு பேருந்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்ததும், அந்த நடத்துனருக்கு மாவட்ட ஆட்சியர் பேருந்து நிழற்குடையில் வைத்தே கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

மேலும், கொரோனா காலங்களில் நடத்துனர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்றும் சுகாதாரத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...