கோவை: பொள்ளாச்சி அருகே நெகமம் பகுதியில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பொள்ளாச்சியை அடுத்த நெகமம் நாராயண நாயக்கன் புதூரை சேர்ந்தவர் 19 வயதான சூர்யா. இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவர் தனது தாய் மற்றும் சகோதரனுடன் வசித்து வருகிறார்.
இதனிடையே, நான்கு நாட்களுக்கு முன்பு இவரது சகோதரரும், தாயும் அவர்களது சொந்த ஊரான மதுரை வைரவ பட்டிக்கு சென்றுள்ளனர். இதனையடுத்து, சூர்யா வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்துள்ளார்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் சூர்யாவின் நண்பர் சூர்யாவை பார்ப்பதற்காக அவரது வீட்டிற்குச் சென்ற போது, கதவு உள்பக்கமாக தாளிடப்பட்டு இருந்தது. மேலும் வெகுநேரமாக அழைத்துப் பார்த்தும் எந்தவித பதிலும் வரவில்லை.
மேலும், துர்நாற்றம் வீசியதை கண்டு கதவின் துவாரம் வழியே உள்ளே பார்த்துள்ளார். அப்போது சூர்யா சடலமாக கிடந்தது தெரியவந்தது.
பின்னர், இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்ததைடுத்து, அங்கு விரைந்த நெகமம் போலீசார் சூர்யாவின் உடலை கைப்பற்றி, வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.