கோவை சூலூர் அருகே ஆட்டோ கொள்ளையர்கள் இருவர் கைது..!

கோவை: கோவை சூலூர் அருகே ஆட்டோ கொள்ளையர்கள் இரண்டு பேரை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் பிடித்து சிறையில் அடைத்தனர்.


கோவை: கோவை சூலூர் அருகே ஆட்டோ கொள்ளையர்கள் இரண்டு பேரை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் பிடித்து சிறையில் அடைத்தனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கோவை, சூலூர் அருகே உள்ள காங்கேயம் பாளையத்தில் வழக்கமான ரோந்து பணியில் சூலூர் போலீசார் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகத்திற்கு இடமான வகையில் மினி லோடு ஆட்டோ ஒன்று வந்துள்ளது.

இதனையடுத்து, போலீசார் அந்த ஆட்டோவை நிறுத்தி ஓட்டுனரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். விசாரணையில் ஆட்டோவை ஓட்டி வந்த ஓட்டுனர் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்துள்ளார்.

இதையடுத்து, ஆட்டோ ஓட்டுனர் மற்றும் உடன் வந்த நபரை காவல் நிலையம் அழைத்துச் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டதில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சின்னதுரை (35) மற்றும் உசிலம்பட்டி பகுதியைச் சேர்ந்த ராஜேஷ்(30) என்பதும், இருவரும் சூலூர், சுல்தான்பேட்டை, கிணத்துக்கடவு உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ச்சியாக மினி ஆட்டோக்கள் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

மேலும், திருடப்பட்ட ஆட்டோவில் உள்ள உதிரிபகங்களை தனித்தனியாக பிரித்து மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் விற்பனை செய்து வந்தது விசாரணையில் தெரியவந்தது.

இதனையடுத்து, மேலும் அவர்களிடம் விசாரணை நடத்தியதில் சூலூர் மற்றும் பொள்ளாச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில் திருடிய 6 மினி ஆட்டோக்கள் காங்கேயம் பாளையம் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது விசாரணையில் தெரியவந்தது.

பின்னர், காங்கயம்பாளையம் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 6 மினி ஆட்டோக்களை பறிமுதல் செய்த போலீசார், இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...