கோவையில் மின் கம்பத்தை அகற்ற பெண்ணிடம் ரூ.23 ஆயிரம் லஞ்சம் கேட்ட உதவி மின் பொறியாளர் கையும் களவுமாக கைது!

கோவை: கோவையில் மின் கம்பத்தை அகற்ற 23 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற மின் வாரிய உதவி மின் பொறியாளர் கைது செய்யப்பட்டார்.


கோவை: கோவையில் மின் கம்பத்தை அகற்ற 23 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற மின் வாரிய உதவி மின் பொறியாளர் கைது செய்யப்பட்டார்.

கோவை ஆனைகட்டியை சேர்ந்தவர் ஜெயந்தி (45). இவருக்கு சொந்தமான இடத்தின் அருகே இடையூறாக இருந்த மின் கம்பத்தை சற்று நகர்த்தி வைக்க சின்னதடாகம் மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.

அப்போது, மின்வாரிய உதவி இன்ஜி., சுரேஷ்பாபு (49), அரசுக்கு செலுத்த வேண்டிய தொகையுடன் சேர்த்து, 80 ஆயிரம் ரூபாய் கேட்டுள்ளார். இறுதியாக, 23 ஆயிரம் ரூபாய் லஞ்ச பணத்துடன், 55 ஆயிரம் கேட்டார். இதற்கு சம்மதம் தெரிவித்த ஜெயந்தி, லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.

பின்னர், போலீசார் அளித்த ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளுடன் ஜெயந்தி, சின்ன தடாகம் மின்வாரியம் உதவி இன்ஜி., யிடம் லஞ்ச பணத்தை கொடுத்தார். அப்போது, லஞ்ச ஒழிப்பு கூடுதல் எஸ்.பி., திவ்யா தலைமையிலான போலீசார் சுரேஷ்பாபுவை சுற்றிவளைத்துப் பிடித்து கைது செய்தனர். இதன்பின், பன்னிமடையிலுள்ள அவரது வீட் டில் நேற்று நள்ளிரவு வரை சோதனையிட்டு ஆவணங்களை கைப்பற்றினர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொதுமக்கள் தங்களிடம் லஞ்சம் கேட்பவர்கள் குறித்து புகார் தெரிவிக்க..

கதவு எண்:4, ராமசாமி நகர், தீயணைப்பு நிலையம் அருகே, கவுண்டம்பாளையம், கோவை--641030 என்ற முகவரியில் தெரிவிக்கலாம். மேலும், 0422-2449550 என்ற எண்ணிலும், 95977 87550 என்ற வாட்ஸ்ஆப் எண் மூலமும், dspvac [email protected] என்ற இமெயில் மூலமும் தெரிவிக்கலாம் என, கோவை லஞ்ச ஒழிப்பு கூடுதல் எஸ்.பி., திவ்யா தெரிவித்தார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...