பொள்ளாச்சி அருகே சூதாட்டத்தில் ஈடுபட்ட 8 பேர் கைது - 36,270 பணம் பறிமுதல்!

கோவை: பொள்ளாச்சி அருகே சூதாட்டத்தில் ஈடுபட்ட 8 பேரை கைது செய்த தாலுகா காவல் நிலைய போலீசார் 36,270 பணத்தை பறிமுதல் செய்தனர்.


கோவை: பொள்ளாச்சி அருகே சூதாட்டத்தில் ஈடுபட்ட 8 பேரை கைது செய்த தாலுகா காவல் நிலைய போலீசார் 36,270 பணத்தை பறிமுதல் செய்தனர்.

பொள்ளாச்சியை அடுத்துள்ள தப்பட்டை கிழவன் புதூர் பகுதியில் ஒரு தனியார் தோட்டத்தில் பணம் வைத்து சூதாட்டம் நடத்தப்படுவதாக தாலுகா போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த இன்ஸ்பெக்டர் விஜயன் மற்றும் எஸ்எஸ்ஐ சந்திரன் உள்ளிட்ட போலீசார் அங்கு சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, மீனாட்சி புரத்தைச் சேர்ந்த 32 வயதான பிரகாஷ், 25 வயதான சரவணகுமார், பெரிய போதுவை சேர்ந்த 27 வயதான சக்திவேல், திவன்சாபுதூரை சேர்ந்த 25 வயதான ராஜேஷ்குமார், கிழவன்புதூரை சேர்ந்த 27 வயதான பசுபதி, வீரப்பகவுண்டனூரை சேர்ந்த 20 வயதான நாகராஜ், 23 வயதான ரமேஷ், கருமாண்டகவுண்டனூரை 25 வயதான பார்த்திபன் என 8 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து 36,270 ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...