கல்வி வளர்ச்சி நாள் கொண்டாட்டம்: கோவையில் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நேரில் சென்று பாராட்டு!

கோவை: கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படும் காமராஜர் பிறந்தநாளில், ஆன்லைன் மூலம் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நேரில் சென்று பரிசுகளை வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.


கோவை: கோவையில் காமராஜர் பிறந்தநாள் விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தமிழக அரசு இதை கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்துள்ளது. இப்பொழுது ஊரடங்கு காரணமாக மாணவ - மாணவிகள் ஆன்லைன் மூலமாக படித்து வருகின்றனர்.

இந்த சூழ்நிலையில் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு ஆன்லைன் மூலமாக மாணவ, மாணவிகளை ஊக்கப்படுத்தும் வகையில், பல்வேறு விதமான போட்டிகள் அரசுப் பள்ளி சார்பாக நடத்தப்பட்டது.

அதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பள்ளியில் உள்ள ஆசிரியர்கள், பரிசுப் பொருள்களை வீட்டிற்கே கொண்டு சென்று அவர்களுடைய பெற்றோர்கள் முன்னிலையில் மாணவர்களுக்கு வழங்கி வாழ்த்து தெரிவித்தது நெஞ்சை நிகழ்ச்சி படுத்துவதாக இருந்தது.

அதன்படி, கோவை பாப்பநாயக்கன்பாளையம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் கொண்டாடப்பட்டு, மாணவர்களுக்கு ஆன்லைன் வாயிலாக போட்டிகளும் நடத்தப்பட்டன. முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படுகிறது.

இந்த நிலையில், நேற்று, பாப்பநாயக்கன்பாளையம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் ஆன்லைன் வாயிலாக மாணவர்களுக்கு ஓவியம், கட்டுரை, பேச்சுப்போட்டி உள்ளிட்டவை நடத்தப்பட்டது.

இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களின் வீட்டுக்கே சென்று பெற்றோர்கள் முன்னிலையில் பரிசுகள் வழங்கி மாணவர்களை ஊக்கப்படுத்தினர்.

பள்ளி ஆசிரியர் சக்திவேல் கூறுகையில், "மாணவர்களுக்கு கல்வியின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, தலைமையாசிரியை தலைமையில் ஆசிரியர்கள் ஒன்றிணைந்து மாணவர்களுக்கு போட்டி நடத்தினோம். இதில் வெற்றி பெற்ற மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக மாணவர்கள் வீடுகளுக்கே சென்று பரிசுகள் வழங்கினோம்," என்று தெரிவித்தார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...