கோவை: வால்பாறை கூழாங்கல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சோலையார் அணை நீர்ப்பிடிப்பு பகுதியான சின்னக்கல்லார் மற்றும் நீரார் அணை பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இப்பகுதியில் பெய்யும் மழைநீர் அனைத்தும் கூழாங்கல் ஆற்றின் வழியாக சோலையார் அணைக்கு செல்கிறது.
கூழாங்கல் ஆற்றில் இன்றைய காலை 6 மணி நிலவரப்படி 3 ஆயிரத்து 500 கனஅடி நீர் சோலையார் அணைக்கு சென்று கொண்டுள்ளது. கூழாங்கல் ஆற்று பகுதி ஒரு சுற்றுலாத் தலமாகும். இதன் காரணமாக இந்த ஆற்றில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்கின்றனர்.
மேலும், வால்பாறை நகரை ஒட்டி உள்ளதால் பொதுமக்களும் துணி துவைப்பதற்கும் குளிப்பதற்கும் இந்த ஆற்றை பயன்படுத்துகிறார்கள்.
ஆகவே, வெள்ளப்பெருக்கில் உயிரிழப்பு ஏற்படுவதை தடுப்பதற்காக வருவாய்த்துறை சார்பில் கூழாங்கல் ஆற்றில் பொதுமக்கள் குளிப்பதற்கும் துணி துவைப்பதற்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளனர். மேலும் வருவாய்த் துறை, வனத்துறை மற்றும் காவல்துறை இணைந்து கண்காணிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.