கோவையில் ஜிகா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை: 228 ஊராட்சிகளை கண்காணிக்க 12 பறக்கும் படைகள் அமைப்பு

கேரளா மாநிலத்தில் வேகமாக பரவி வரும் ஜிகா வைரஸ், கோவை மாவட்டத்தில் பரவாமல் இருக்க ஊரக பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கேரளா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக ஜிகா வைரஸ் பரவி வருகிறது. இந்த வைரஸ் கொசுக்கள் மூலம் உருவாகி, மனிதர்களை அந்த கொசுக்கள் கடிக்கும் போது பரவுகிறது. இந்த வைரஸ் டெங்குவை பரப்பும் ஏ.டி.எஸ் வகை கொசுக்களை சார்ந்தது.


கோவை: கேரளா மாநிலத்தில் வேகமாக பரவி வரும் ஜிகா வைரஸ், கோவை மாவட்டத்தில் பரவாமல் இருக்க ஊரக பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கேரளா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக ஜிகா வைரஸ் பரவி வருகிறது. இந்த வைரஸ் கொசுக்கள் மூலம் உருவாகி, மனிதர்களை அந்த கொசுக்கள் கடிக்கும் போது பரவுகிறது. இந்த வைரஸ் டெங்குவை பரப்பும் ஏ.டி.எஸ் வகை கொசுக்களை சார்ந்தது.

இதன் ஒருபகுதியாக 228 ஊராட்சிகளை கண்காணிக்க 12 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன என மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார். இதனிடையே, நோய் பரவலை கட்டுப்படுத்த தமிழகம் - கேரளா மாநில எல்லைப் பகுதிகள் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றன. குறிப்பாக, கோவை மாவட்டத்தில் கேரளா மாநில எல்லைப்பகுதிகளில் உள்ள 13 சோதனை சாவடிகளும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், கோவை மாவட்ட ஊரக பகுதிகளில் கொசுக்களினால் உருவாகும் நோய்களை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக ஜிகா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரக பகுதிகளில் உள்ள 228 ஊராட்சிகளை கண்காணிக்க 12 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவர் கூறியதாவது: கோவை மாவட்டத்தில் காரமடை, மதுக்கரை, பெ.நா.பாளையம், எஸ்.எஸ் குளம், தொண்டாமுத்தூர், ஆனைமலை, கிணத்துக்கடவு, பொள்ளாச்சி வடக்கு, பொள்ளாச்சி தெற்கு, அன்னூர், சூலூர், சுல்தான்பேட்டை என 12 ஒன்றியங்கள் உள்ளன. இதில் 228 ஊராட்சிகள் உள்ளது. இந்த ஊராட்சிகளை கண்காணிக்க ஒன்றியத்திற்கு ஒரு பறக்கும் படை விதம் 12 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் துணை தாசில்தார் அந்தஸ்தில் அதிகாரி ஒருவர், சுகாதாரத்துறை ஊழியர்கள், ஊரக பிரிவு அதிகாரிகள் ஆகியோர் இருப்பார்கள். இந்த பறக்கும் படை, ஒன்றியங்களில் உள்ள ஊராட்சிகளுக்கு சென்று கொசு ஒழிப்பு பணிகளை கண்காணிப்பாளர்கள்.

மேலும், ஏ.டி.எஸ் வகை கொசுக்கள் உற்பத்தி ஆகாமல் இருக்க தண்ணீர் தேக்கம் உள்ள இடங்களுக்கு சென்று மக்களுக்கு விழிப்புணர்வு அளிப்பார்கள், என்றார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...