ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சி துவக்கம்

ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் அக்கல்லூரி மாணவிகளுக்கான தற்காப்புகள் குறித்து மூன்று நாள் பயிற்சி துவங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியின் முதல்வர் கே.சித்ரா கூறியதாவது:-

இந்நாட்டில் பிறந்த குழந்தை முதல் 90 வயது வரை உள்ள பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. இந்திய மக்கள் தொகையில் பெண்கள் 50 சதவிகிதம் உள்ளனர். ஆனால், அவர்கள் சமூகத்தில் வன்முறைக்கும், ஒடுக்குமுறைக்கும் உட்படுத்தப்பட்டு வருகின்றனர். பெண்கள் மீது தினிக்கப்படும் ஒடுக்குமுறையால் அவர்கள் சமுதாயத்துடன் ஒன்றிணையாமல் வேலைக்குச் செல்ல முடியாமல் யாரையேனும் சார்ந்தே வாழ்ந்து வருகின்றனர்.



பெண்களாக நாம் மிகவும் விழிப்புணர்வோடும், எச்சரிக்கையோடும் இருக்க வேண்டும். தற்காத்துக்கொள்வது என்பது உடல் ரீதியிலான பிரச்சனைகளில் மட்டுமின்றி மனரீதியாகவும் பாதுகாத்துக்கொள்வது ஆகும்'' என்றார்.

அறம் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் லதா சுந்தரம் கூறியதாவது:-

பெண்களுக்கு அவர்களது தன்மானம் மிகவும் முக்கியம். இவ்வுலகில் ஒரு பெண்ணால் முடியாதது வேறு யாராலும் முடியாது. கடவுளின் படைப்பில் பெண்கள் மிகவும் சக்தி படைத்த திறமையாளர்கள். பெண்கள் பல வகைகளில் துன்புருத்தலுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். பெண்கள் நினைத்தால் உலகை மாற்ற முடியும்'' என்றார்.படைப்பில் பெண்கள் மிகவும் சக்தி படைத்த திறமையாளர்கள். பெண்கள் பல வகைகளில் துன்புருத்தலுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். பெண்கள் நினைத்தால் உலகை மாற்ற முடியும்'' என்றார்.

இதுகுறித்து நமது நிருபருக்கு லதா சுந்தரம் அளித்த பிரத்தியேக பேட்டியில் கூறுகையில், 

ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். இன்றைய காலகட்டத்தில் பெண்கள் தங்களை தற்காத்துக்கொள்வது என்பது மிகவும் முக்கியம். அது இக்காலத்தின் கட்டாயம். பெண்கள் என்று தாங்களாகவே பிரச்சனையில் சிக்கிக் கொள்கின்றனர். பின்பு அவதிப்படுகின்றனர். இந்த பயிற்சியானது பெண்களிடையே மாற்றத்தினை ஏற்படுத்தும் என நம்புகிறேன்'' என்றார்.



இந்நிகழ்ச்சியில், அறம் அறக்கட்டளை அறங்காவலர் மற்றும் வழக்கறிஞர் டி.சிவகுமார், கோகுலராஜ், விவேக் ஆகியோர் மாணவிகளுக்கு தற்காப்புகள் குறித்த பயிற்சி அளித்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான மண்டல அலுவலர்கள் பயிற்சி நிகழ்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்காக 10 தொகுதிகளுக்கான 366 மண்டல அலுவலர்கள் மற்றும் உதவி மண்டல அலுவலர்க...

T20 உலகக்கோப்பை வீரர் சஞ்சு சாம்சன் கோவை ADISSIA நிறுவனத்தின் Brand Ambassador ஆனார்

T20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்காற்றிய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன், கோவையைச் சேர...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் DST-FIST ஆதரவுடன் ₹1 கோடி மதிப்பில் ஆராய்ச்சி உள்கட்டமைப்பு வலுப்படுத்தல்

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் மார்ச் 25, 2026 அன்று DST-FIST நிதியுதவியுடன் ₹1 கோடி மதி...

கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் Rotary மற்றும் Rotaract Club இணைந்து 'கலைத் தாரகை' விருது வழங்கும் விழா

கோவை ஈச்சனாரியில் உள்ள கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் Rotary மற்றும் Rotaract Club இணைந்து விருது வழங்கும் விழா நடை...

பள்ளபாளையத்தில் புதிய ஆட்டோமொபைல் கடையினை திறந்து வைத்தார் திமுக கழக செயலாளர் முருகேசன்

கோவை தெற்கு மாவட்டம் பள்ளபாளையம் பேரூராட்சி பாப்புலர் கார்டன் பகுதியில் அமைந்துள்ள புதிய ஆட்டோமொபைல் கடையினை திமுக கழக ச...

கோவையில் செல்போனில் பேசியபடி நடந்த இளைஞர் இரண்டாவது மாடியில் இருந்து விழுந்து பலி

கோவை வடவள்ளியில் மனைவியுடன் செல்போனில் பேசியபடி மாடிக்கு நடந்து சென்ற ஜேசிபி ஆபரேட்டர் விவேக் (33) இரண்டாவது மாடியில் இர...